districts

புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா

பாபநாசம், ஜுலை 4-

     தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி சங்க புதிய  நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது.

     பாபநாசம் ரோட்டரி சங்கத் தலைவர் அறிவழகன் தலைமை வகித்தார். செயலாளர் சிலம்பரசன் ஆண்ட றிக்கை வாசித்தார். பாபநாசம் ரோட்டரி சங்க புதிய தலை வராக செல்வகுமார், செயலாளராக முருகவேலு, பொரு ளாளராக ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகி களாக பொறுப்பேற்றுக் கொண்டனர். ரோட்டரி மாவட்ட  முன்னாள் ஆளுநர் பாலாஜிபாபு சிறப்பு விருந்தினராக வும், மதுரை மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம் சிறப்பு அழைப்பாளராகவும் கலந்து கொண்டனர்.  

    இவ்விழாவில், ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தையல் எந்திரம், இஸ்திரி பெட்டி, மாணவர்களுக்கு கல்வி  உதவித்தொகை, அரசு பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடம் பிடித்த மாண வர்களுக்கு ஷீல்டு, பரிசு வழங்கப்பட்டது.