districts

திருச்சி முக்கிய செய்திகள்

வேங்கைவயல் உண்மை கண்டறியும் சோதனை மனு மீதான விசாரணை  டிச. 5-க்கு ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, நவ.28-  வேங்கைவயல் விவகாரத்தில் சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தக் கோரும்  மனு மீதான விசாரணையை வரும் டிசம்பர் 5ஆம் தேதிக்கு  ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார். புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டிய லினக் குடியிருப்பின் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்  மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் கடந்த 2022 டிசம்பர்  26ஆம் தேதி தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக தற்போது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். புலன்விசாரணையின் முதல் கட்டமாக, வேங்கைவயல், இறையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31 பேரிடம் மரபணு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக 10 பேரிடம் உண்மை கண்டறி யும் சோதனை நடத்த சிபிசிஐடி போலீசார் முடிவுசெய்த னர். இதுகுறித்த மனுவை மாவட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடு மைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீ சார் அண்மையில் தாக்கல் செய்தனர். சோதனை நடத்தக்  கோரும் 10 பேருக்கும் நீதிமன்றத்தின் மூலம் குறிப்பாணை  வழங்கப்பட்டு அனைவரும் செவ்வாய்க்கிழமை ஆஜ ராகினர். வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் தரப்பில்  ஆஜரான வழக்குரைஞர் மலர்மன்னன், இந்தச் சோத னைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். எந்த இடத்தில் சோதனை  நடத்தப்படவுள்ளது, அவர்களை அழைத்துச் செல்வது, சோதனைக்கு பொறுப்பு யார் என்பது குறித்தும் சிபி சிஐடி போலீசாரின் மனுவில் இல்லை என்பதையும் வழக்கு ரைஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, அனைத்து விவரங்களையும் சேர்த்து புதிய மனுவைத் தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீசாருக்கு உத்தரவிட்ட நீதிபதி எஸ், ஜெயந்தி, மனு மீதான விசாரணையை வரும் டிசம்பர்  5ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த  சிறுவனை கடித்துக் குதறிய நாய்கள்  

தஞ்சாவூர், நவ.28 –  தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே மழவேனிற்காடு கிரா மத்தை சேர்ந்தவர் ரிஸ்வான் அலி. கூலித்தொழிலாளி. இவரது மனைவி  தஸ்லிமா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை இரண்டு குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், ஆதிஸ் (3), என்ற சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டி ருந்தான். தஸ்லிமா சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென தெருவில் சுற்றித்திரிந்த மூன்று நாய்கள் வீட்டுக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த ஆதிஸ் மீது பாய்ந்து தலைப்பகுதியில் கடித்துக் குதறின. சத்தம் கேட்டு ஓடி வந்த தாய் தஸ்லிமா கூச்சலிட்டார். சிறுவன் வலி தாங்க முடியாமல் அழுது துடித்தான். சத்தம் கேட்டதால் நாய்கள் ஓடின. பின்னர், அக்கம் பக்கத்தி னர் உதவியுடன் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.