districts

உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் நோயாளிகள் கையெழுத்து இட மறுக்கும் வருவாய் கோட்டாட்சியர்

தென்காசி, ஜூலை 9-

    தென்காசியில் கல்லீரல், கிட்னி பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக கிட்னி கல்லீரல் தரவிருக்கும் சூழ்நிலை யில், வருவாய் கோட்டாட்சியர் கையெழுத்துக்காக 2  நாட்களுக்கு மேலாக தற்போதுவரை நோய் பாதிக் கப்பட்டவர்களுடன் காத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

   தென்காசி மாவட்டம் ஆவுடையநல்லூர் பகுதியில்  சேர்ந்தவர் ராஜ்குமார் (34). இவரது மனைவி திராவிட செல்வி (30). கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட  கணவன் ராஜ்குமாருக்கு அவரது மனைவி கல்லீரல் கொடுக்க முன்வந்துள்ளார். இதேபோன்று கடைய நல்லூர் அடுத்துசொக்கம்பட்டி பகுதியைச்சேர்ந்த காந்திமதி (38) இவரது மகள் மாரீஸ்வரி (23)  இவருக்கு கிட்னி பாதிப்பு இருந்து வந்துள்ளது. இவருக்கு கிட்னி வழங்குவதற்கு அவரது தாய் முன் வந்துள்ளார்.

    உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக நெல்லை  அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வந்தனர். உறுப்பு மாற்று அறுவை சிகிச் சைக்கு தென்காசி வருவாய் கோட்டாட்சியர் லாவண்யா விடம் உரிய ஒப்புதல் வாங்க வேண்டும் என மருத்து வமனையில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரி  ஒப்புதலுக்காக 2 குடும்பத்தினரும் விண்ணப்பித்த நிலை யில், அதிகாரி தரப்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப் படாமல் 3 நாட்களாக அழைக்கழிக்கப்பட்டதாக கூறப் படுகிறது. இதனைத் தொடர்ந்து நோயாளிகளும்  கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து  கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் அதிகாரி தரப்பில் எந்தவித பதிலும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டப்பட்டுள்ளது.

     இதனைதொடர்ந்து அதிகாரி ஒப்புதலுக்காக உற வினர்கள் நோயாளிகளுடன் கோட்டாச்சியர் அலுவல கத்தில் அதாவது வெள்ளியன்று காலை 10 மணி முதல் இரவு 10 மணியை கடந்தும் காத்திருக்கும் அவலம் ஏற் பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரப்பட்டுள்ளது.