districts

img

தமிழ் பல்கலை.யில் சொற்பொழிவு

தஞ்சாவூர், பிப்.29 -  தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத்துறை யில், மகாகவி பாரதியார் அறக்கட்டளைச் சொற்பொழிவு நடைபெற்றது.   பல்கலைக்கழகத் துணைவேந்தர்  வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் ஜெ.தேவி வர வேற்றார்.  திருச்சி, உருமு தனலெட்சுமி கல்லூரியின் முதல் வர், முனைவர் இ.ஆர்.இரவிச்சந்திரன், “பாரதி-இலக்கிய எரிபொருள்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  நந்தனம் அரசு ஆடவர் கல்லூரிப் பேராசிரியர் சொற்கோ. இரா.கருணாநிதி,  மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் ச.கவிதா ஆகியோர் பேசினர்.  இணைப்பேராசிரியர் அ.இரவிச்சந்திரன் நன்றி கூறினார். முனைவர் பட்ட மாணவி மு.வினிதா தொகுத்து வழங்கினார். மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.