districts

மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாம்

திருவாரூர், மே 23-

    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் ஆட்சியர் தி.சாருஸ்ரீ  தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் குடிமனை பட்டா, உபகரணங்கள், உதவி தொகை உயர்வு வேண்டி மனு அளித்தனர்.

    வர இய லாத மாற்றத்தினாளிகளின் மனுக்களை மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ஜெ.ஜெயராஜ் , மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்  கே.பாலசுப்ரமணியன், டி.சந்திரா, வி.கிருஷ் ணமூர்த்தி  உள்ளிட்டோர் ஆட்சியரிடம் வழங்கினர்.

   முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், பேட்டரியால் இயங்கும்  சக்கர நாற்காலிகள். இயற்கை மரணம் சமசடங்கு உதவித்  தொகை, மூன்று சக்கர சைக்கிள், காதொலி கருவி, இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை, கண் கண்ணாடி என ரூ.4 லட்சத்து 39 ஆயிரத்து 630 மதிப்பிலான நலத்திட்ட  உதவிகள் வழங்கப்பட்டது. ஏழு நபர்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான  இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையை ஆட்சியர்  வழங்கினார்.

   மாவட்ட வருவாய் அலுவலர் ப.சிதம்பரம் கோட்டாட்சியர் சங்கீதா உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலு வலர்கள் பங்கேற்றனர்.