தஞ்சாவூர், டிச.9- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவ லர்கள் சங்க பேராவூரணி வட்டக் கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழனன்று, உணவு இடைவேளை நேரத்தின் போது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரிந்த உதவி பொறியாளர் சந்தோஷ்குமார் உயர் அலுவலர்களின் கடுமையான பணி நெருக்க டிகள் காரணமாகவும், அரசியல் நெருக்கடி, காரணமாகவும், மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். உயர் அலுவலர்களின் எல்லைமீறிய நடவடிக்கைகளை கண்டித்தும், இத்தகைய அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வலியுறுத்தியும், உதவிப் பொறியாளர் சந்தோஷ்குமார் தற்கொலைக்கு காரண மான அலுவலர்கள் மீது குற்றவியல் நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தியும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ மகேஸ் தலைமை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதவி பொறி யாளர் பாலசுப்பிரமணியன், பொறியாளர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தவமணி, குமாரவடிவேல், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சக்தி நாதன், வட்டத் தலைவர் கி.சுரேஷ் மற்றும் ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.