districts

img

டென்மார்க் நாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தும் புகைப்பட கண்காட்சி

மயிலாடுதுறை, டிச.11 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள டேனிஷ் அருங்காட்சியகத்தில் டென்மார்க் நாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தும் புகைப்பட கண் காட்சி துவங்கியுள்ளது.  கொரோனா நோய் தொற்றுக்கு பிறகு தரங்கம்பாடிக்கு வந்துள்ள டேனிஷ் - தரங்கம்பாடி நட்புறவு சங்கத்தின் தலைவர் பால் பீட்டர் சன் தலைமையிலான குழுவினர் தரங்கம்பாடி - டென்மார்க் நட்புறவை யும், டேனிஷ் கலாச்சாரத்தை பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து கொள்ளும்  வகையில் டென்மார்க் நாட்டின் பிரபல புகைப்படக் கலை ஞர் பெர்ட் விக்லூன்ட் எடுத்த அரிய  புகைப்படங்களை இந்த அருங்காட்சி யகத்தில் காட்சிப்படுத்தி கண்காட்சி யாக அமைத்துள்ளனர்.  புகைப்பட கண்காட்சியினை இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், சுற்றுலா விரும்பிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் செயின்ட் தெரசா  கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் கருணா ஜோசபாத்,  ஓய்வு  பெற்ற பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான மரிய லாசர் மற்றும்  கல்லூரி பேராசிரியர் பிளாரன்ஸ், அருங்காட்சியகத்தின் பொறுப்பா ளர் சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தொடர்ந்து இந்தியா - டென்மார்க் கலாச்சார மையத்தின் தலைவர் பால் பீட்டர்சன் தலைமையிலான டென்மார்க் நாட்டினர் குழுவாக செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்ததாவது: “தரங்கம்பாடி - டென்மார்க் இடை யேயான 400 ஆண்டு கால  நட்புறவு குறித்தும், தரங்கம்பாடி யில் உள்ள முக்கிய இடங்களின்  புகைப்படங்களை மிக ஆர்வமாக வும், தங்களின் மூதாதையர்கள் வாழ்ந்த இடங்கள் என உணர்ச்சி பொங்க ரசிக்கின்றனர். தற்போது துவங்கியுள்ள கண்காட்சியில் இடம்பெற்றுள்ள புகைப்படங்களை வைத்து டென்மார்க் நாட்டின் அழகை யும், அமைப்பையும் அறிந்து கொள்ள லாம்.  பழமையான டேனிஷ்கோட்டை கடல் அலைகளால் சேதமடைவதை தடுக்க நடவடிக்கை எடுத்திட வேண்டு மென மாவட்ட நிர்வாகத்திடம் தெரி வித்துள்ளோம். டேனிஷ் ஆளுனர்  மாளிகையை சீரமைத்து பொது மக்கள் பார்வைக்கு கொண்டு வர  வேண்டும். கடற்கரையில் சுகாதா ரத்தை மேம்படுத்த கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டுள்ளது. டென்மார்க் நாட்டினர் தரங்கம்பாடிக்கு வந்து 400 ஆண்டுகள் கடந்த நிலையில், அதனை கொண்டாடும் விதமாக விரைவில் பிரம்மாண்ட விழா ஒன்றை  நடத்த உள்ளோம். 

விழாவில் டென்மார்க் நாட்டின்  பிரதிநிதியாக மன்னர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்க வாய்ப்பு உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்க ளுக்கு பல்வேறு போட்டிகளும்,  பயனுள்ள கருத்தரங்குகளும் நடத்த வும், தமிழக தலைவர்களையும் சந்தி த்து பங்கேற்க அழைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்த னர்.

தரங்கம்பாடியையும் பராமரிக்க வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் உள்ள பல நூறு ஆண்டுகள் பழமையான வரலாற்று சின்னங்களை மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெ. சண்முகம் சனிக்கிழமை பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர் ஏ.ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம் கூறுகை யில், தமிழகத்தில் உள்ள மிக தொன் மையான நகரங்களில் தரங்கம்பாடி யும் ஒன்று. 400 ஆண்டுகள் பழமை யான டேனிஷ்கோட்டை தற்போது பாழடைந்தும், பராமரிப்பின்றியும், சிதிலமடைந்தும் இருப்பது வேதனை யாக இருக்கிறது. தற்போது தமிழகத் தில் ஆட்சிக்கு வந்துள்ள தமிழக  அரசு கீழடி உள்ளிட்ட பல தொன்மை யான நினைவுச் சின்னங்களை பாது காப்பதற்கு எடுத்து வரும் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகளும், அதற் குண்டான நிதி ஒதுக்கீடுகளும் பாராட்டுக்குரியது. அதேபோன்று தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையை யும் புதுப்பித்து, பராமரித்து, பாது காக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம் என்றார்.

;