districts

சிபிஎம் இணையதளப் பயிற்சி முகாம்

புதுக்கோட்டை, ஜூன் 10-  

    மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில அளவிலான இணையதள ஒருங்கி ணைப்பு பயிற்சி முகாம்  ஜூன் 10, 11 ஆகிய தேதி களில் புதுக்கோட்டை யில் நடைபெற்று வரு கிறது.

    புதுக்கோட்டை ஆர்.கே. நினைவகத்தில் நடை பெற்ற பயிற்சி முகாமை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி தொடங்கி வைத்து உரை யாற்றினார். ‘சமூக ஊடகத் தின் அரசியல் தாக்கம்’ என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.கண்ணன், ‘உள்ளடக்கம் மற்றும் எதிர்வினைகள்’ என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் இரா.சிந்தன் ஆகியோர் பேசி னர்.

    தொழில்நுட்பம்-போஸ்டர் டிசைனிங் குறித்து சந்தியா ராகினி,  வீடியோகிராபி குறித்து மதன்ராஜ் ஆகியோர் விளக்கவுரை யாற்றி னார். விவாதத்திற்கான அறிக்கையை முன்மொ ழிந்து கன்வீனர் சுதிர் பேசி னார். தொடர்ந்து இன்று  நடைபெறும் பயிற்சி  முகாமில் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ் ணன் உள்ளிட்டோர் பங் கேற்கின்றனர்.