districts

img

சிபிஎம் அரியலூர்-பெரம்பலூர் மாவட்ட மாநாடு பேரணி, கலைநிகழ்ச்சியுடன் துவங்கியது

அரியலூர், டிச. 16 - மாவட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் அரியலூர் - பெரம்பலூர் மாவட்ட மாநாட்டு பேரணி, கலைநிகழ்ச்சி மற்றும் மாநாடு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடை பெற்றது.  மாநாட்டு ஊர்வலம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்காவில் இருந்து  திருச்சி ரோடு, அண்ணாசிலை வழி யாக செந்துரை சாலையில் உள்ள தனி யார் திருமண மண்டபத்திற்கு வந்தது.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் முன்னாள் மாநிலச் செயலா ளர் ஜி.ராமகிருஷ்ணன் கட்சிக்  கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். கந்தர்வகோட்டை எம்எல்ஏவும் மாநிலக் குழு உறுப்பின ருமான எம்.சின்னதுரை, மாவட்ட  செயலாளர் மணிவேல், செயற்குழு  உறுப்பினர்கள் மகாராஜன், இளங் கோவன், அகஸ்டின், செல்லதுரை, துரைசாமி, கலையரசி, ராசாங்கம், ரமேஷ்,  ஜெயங்கொண்டம் ஒன்றிய  செயலாளர் வெங்கடாசலம், தா.பழூர்  ஒன்றிய செயலாளர் ராதாகி ருஷ்ணன், வேப்பந்தட்டை வட்ட செய லாளர் கோபாலகிருஷ்ணன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கருணாநிதி, பெரம்பலூர் ஒன்றியச் செயலாளர் கருணாநிதி, நகர செய லாளர் துரை.அருணன், திருமானூர் செல்லதுரை, ஆண்டிமடம் வட்ட செயலாளர் பரமசிவம், குன்னம் வட்ட செயலாளர் செல்லமுத்து, மின்னரங்க செயலாளர் கண்ணன், இளவரசன், சௌரிராஜன், அருண் பாண்டியன், தங்கராசு, மலர்கொடி, புனிதன் உள்ளிட்ட அரியலூர் மற்றும்  பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த  மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.

மாநாடு மற்றும் கலை நிகழ்ச்சி முடிந்து ஜெயங்கொண்டம் தனியார் திருமண மண்டபத்தில் மாநாட்டு பொதுக்கூட்டம் மற்றும் பிரதிநிதி கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.  கூட்டத்தில் அரியலூர் மாவட்டத் தில் தொழிற்சாலைகளை தொடங்கி புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்கிட வேண்டும். விவசாய உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைத்திட வும் விவசாயத்தை பாதுகாத்திட வும் வேண்டும். கொள்ளிடத்தில் தடுப் பணைகள் கட்டி பாசன வசதி செய்து தர வேண்டும். ஜெயங்கொண்டம் நிலக்கரி திட்டத்திற்கு நிலம் கொடுத் தவர்களுக்கு, குன்னம் வட்டத்தில்  சிறப்பு பொருளாதார மண்டலத் திற்கு நிலம் கொடுத்தவர்களுக்கு திட்டங்கள் தொடங்காத காரணத்தி னால் மீண்டும் விவசாயிகளின் நிலத்தை வழங்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஏழை, எளிய  மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட வேண்டும். மாவட்ட  அரசு தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்தி உயர் சிகிச்சை அளிக்க  வேண்டும். நூறு நாள் வேலைத்திட் டத்தில் ஒரு குடும்பத்திற்கு கட்டாயம் வேலை வழங்க வேண்டும். நக ராட்சி, பேரூராட்சிகளுக்கும் நூறு  நாள் வேலையை வழங்க வேண்டும்.  பெட்ரோல் - டீசல் விலை உயர்வை தடுத்து நிறுத்தி விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்த வேண்டும்.

ஒன்றிய மோடி அரசு பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்வதை தடுத்து நிறுத்திட வேண்டும். நாட்டின் ஒற்று மையை, ஜனநாயகத்தை பாதுகாத் திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த போது ஜி.ராமகிருஷ்ணன் கூறுகையில், “வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர் சங்கத்தினர் 17, 18ம் தேதி களில் மேற்கொள்ள உள்ள பொது  வேலை நிறுத்தத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிக்கும். அரியலூர் மாவட்டத்தில் எக்கார ணத்தைக் கொண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடங்க மாநில அரசு  அனுமதி அளிக்கக் கூடாது. ஒன்றிய அரசு இத்திட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.  நாடு முழுவதும் சிறு, குறு மற்றும்  நடுத்தர தொழில்கள் பெருமளவில் நஷ்டமடைந்து மூடப்பட்டுள்ளன. எனவே இதனை கண்டித்து டிசம்பர் 20 ஆம் தேதி சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள் சார்பில் நடை பெறும் வேலை நிறுத்த போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  ஆதரவளிக்கும். நாடாளுமன்ற கூட்டத் தொடரில் குறைந்தபட்ச ஆதார விலைக்கான மசோதாவை ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண் டும். மின்சார திருத்தச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்” என்றார்.  முடிவில் வரவேற்பு குழு பொரு ளாளர் கோவிந்தராசன் நன்றி கூறி னார்.

;