districts

img

மேச்சேரி பேரூராட்சி நிர்வாகத்தின் கூட்டுக்கொள்ளை

சேலம், ஜூலை 8- மேச்சேரி பேரூராட்சி நிர்வா கத்தின் கீழ் உள்ள கடைகள், சந்தை ஏலத்தில் கூட்டு கொள்ளை நடப் பதை கண்டித்து சேலம் மேச்சேரி யில் மார்க்சிஸ்ட் கட்சியினர் திங்க ளன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.  சேலம் மாவட்டம், மேட்டூர் வட் டம், மேச்சேரி சிறப்புநிலை பேரூ ராட்சி இயங்கி வருகிறது. இதன் கீழ் நூற்றுக்கும் மேற்பட்ட கடைக ளும், வாரசந்தையும், சைக்கிள் ஸ்டேண்டுகளும் இருக்கின்றன. கடந்த 17 ஆண்டுகளுக்கு மேலாக இவற்றிக்கு பகிரங்க ஏலம் விடுவ தில்லை. மாறாக பேரூராட்சி நிர்வா கமும், ஒருசில செல்வாக்குமிக்க அரசியல் புள்ளிகளும் கூட்டுக் கொள்ளை அடித்து வருகிறார்கள். இதனால் அரசுக்கு வரவேண்டிய வருமானம் சிலரின் கைக்கு கொள் ளைபோய் விடுகிறது. மக்களுக்கு குடிநீர், கழிப்பிடம், மின்வசதி, சுகா தாரம் போன்ற அடிப்படை வசதிகள் செய்ய முடியாமல் கையேந்தும் நிலையில் இருக்கிறது. பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த மக்கள் விரோத நடவடிக்கையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேச்சேரி சிறப்புநிலை பேரூராட்சி அலுவலம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  “பேரூராட்சிக்கு உட்பட்ட கடை கள், சந்தை, சைக்கிள் ஸ்டேண்டு அனைத்தையும் கூட்டுக் கொள் ளைக்கு அனுமதிக்கக் கூடாது, பகிரங்க ஏலம் விட்டு, பேரூராட்சி வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கட்சியின் மேச்சேரி பேரூர் செயலாளரும், ஒன்றி யக்குழு உறுப்பினருமான கே.மாது தலைமை ஏற்றார். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ராமமூர்த்தி, தவிச மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.தங்க வேலு மற்றும்  ஜி.மணிமுத்து, ஆர். பழனி, அம்மாசி உள்ளிட்டோர் கோரிக்கைகள் குறித்து உரை யாற்றினர்.  இதனைத்தொடர்ந்து, மேச் சேரி சிறப்புநிலை பேரூராட்சி செயல் அலுவலரிடம் (பொறுப்பு) கோரிக்கை மனுவினை அளித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், இனிமேல் சட்டப்படிதான் ஏலம் விடப்படும் என செயல் அலுவலர் உறுதி அளித்தார்.  ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் பங்கேற்றனர்.