தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி, உதாரமங்கலம் தெற்குத் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 ஆண்டுகளுக்குப் பின் இந்தத் தெருவில் தார்ச்சாலை போடப்படுகிறது. இப்பணியை ஊராட்சித் தலைவர் பழனி, வார்டு உறுப்பினர்கள் பார்வையிட்டனர்.