மன்னார்குடி, அக்.31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றிய முன்னாள் செய லாளருமான தோழர் வை. பூசாந்திரம் படத்திறப்பு அவ ரது சொந்த ஊரான கரிச் சாங்குடியில் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் கே.ஜான் கென்னடி தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய பெருந் தலைவர் சோம.செந்தமிழ்ச் செல்வன், திமுக ஒன்றியச் செயலாளர் கே.வி.கே. ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தோழர் பூசாந்திரம் உருவப் படத்தை சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மாவட்ட செயற்குழு உறு பினர்கள் வி.எஸ்.கலிய பெருமாள், பி.கந்தசாமி, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.சுமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.