திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் தஞ்சை மாநகராட்சி வார்டு எண்:44 இல் போட்டியிடும் திமுக வேட்பாளர் சுகந்தா கண்ணனை ஆதரித்து கூட்டணி கட்சிகளின் சார்பில் செயல்வீரர்கள் கூட்டம், கணபதிநகர், சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் நடைபெற்றது. திமுக மத்திய மாவட்டச் செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, மாநகரச் செயலாளர் டி.கே.ஜி. நீலமேகம் எம்எல்ஏ, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கோ.நீலமேகம், உள்ளிட்டோர் மற்றும் வார்டு செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.