districts

தீபாவளி தற்காலிக கடை அமைப்பதற்காக சாலையோர வியாபாரிகளை அப்புறப்படுத்தக் கூடாது!

தஞ்சாவூர், நவ.4-  தீபாவளி தற்காலிக கடைகள் அமைப் பதற்காக, தஞ்சாவூரில் பல ஆண்டு களாக சாலையோரம் வியாபாரம் செய்யும் வியாபாரிகளை அப்புறப்படுத் தும் செயலுக்கு சிஐடியு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதா வது: தஞ்சாவூர் மாநகராட்சியில் பழைய  பேருந்து நிலையம், காந்திஜி சாலை,  ஞானம் தியேட்டர் சாலை ஆகிய  இடங்களில் தீபாவளி பண்டிகைக் காக தற்காலிக கடைகள் அமைக்க,  பல ஆண்டுகளாக அப்பகுதியில் சாலை ஓரத்தில் பிழைப்பு நடத்தி  வரும், சிறுகடை வியாபாரிகள், ஆட்டோ நிலைய தொழிலாளர் களை வலுக்கட்டாயமாக அப்புறப் படுத்திவிட்டு, அந்த இடங்களில் தற்கா லிக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த  வியாபாரிகளிடம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை கட்டாய வசூல்  செய்யப்படுகிறது. குறிப்பாக இராசா  மிராசுதார் அரசு கண் மருத்துவ மனைக்கு செல்லும் நுழைவு வாயிலை  மறைத்து, நோயாளிகள் செல்லும் பாதையை அடைத்து அந்த இடத்தில்  தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் நோயாளிகள் மருத்து வமனைக்கு செல்லக்கூட பாதை வசதி  இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்படி  அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கடை களுக்கு இடைத்தரகர்கள் மூலம் ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கட்டாய வசூல் செய்து வருகின்றனர். இதனால் தஞ்சாவூர் மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.  பல ஆண்டுகளாக பிழைப்பு நடத்தி  வரும் ஆட்டோ மற்றும் சாலையோர சிறு கடை வியாபாரிகள் என எதிர்ப்பு  தெரிவித்தவர்களை, ‘தீபாவளி பண்டி கைக்கு பிறகு எங்களை மீறி, எப்படி  கடைகள், ஆட்டோக்கள் நிறுத்து வீர்கள்’ என பகிங்கரமாக மிரட்டி வரு கின்றனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பறிபோகும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழக முதல்வர் இந்த பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  இவ்வாறு அதில் கூறியுள்ளார்.