கரூர், மே 31 - 55 ஆவது சிஐடியு அமைப்பு தின சிறப்பு பேரவை கூட்டம், கரூர் சுங்க கேட் சிஐடியு மாவட்டக் குழு அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் மு.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். சிஐடியு தொழிற் சங்க கொடியை ஏற்றி வைத்து, மாவட்டத் தலைவர் ஜி.ஜீவா னந்தம் சிறப்புரையாற்றி னார். ஸ்தாபனம் உடனடி கட மைகள் குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் சி. முருகேசன், முறைசாரா தொழிலாளர்கள் திரட்டலின் வாய்ப்புகளும் அவசியமும் என்ற தலைப்பில் கட்டு மான சங்க மாவட்டச் செய லாளர் சி.ஆர்.ராஜாமுகமது ஆகியோர் பேசினர். மாவட்ட பொருளாளர் ப.சரவணன் நன்றி கூறினார். நலவாரியம் மூலமாக பயிற்சி முகாமில் கலந்து கொண்ட கட்டுமான தொழி லாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் சிஐடியு செய்தி ஆண்டு சந்தா 110-க்கான தொகை ரூ.17,600-க்கான காசோலை வழங்கப்பட்டது. மாவட்ட துணைச் செயலாளர்கள் எம்.பாலசுப்ரமணி, அர விந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.