சிவகாசி, ஆக.22-
தேர்தலில் பணம் கொடுப்பவர்களுக்கு வாக்களிப்பது நாட்டை மோசமான நடவடிக்கைக்கு இட்டுச் செல்லும் என மதிமுகப் பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்தார்.
சிவகாசியில் நடந்த திருமண மண்டபம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர், செய்தியா ளர்களிடம் கூறுகையில், அரசியல் வெற்றி தோல்வி என்பது சாதாரணமாக வந்து போகும். தற்போது அரசி யலில் பணம் கொடுத்தால் தான் ஓட்டு என்ற புதிய நிலைமை உருவாகிஇருக்கிறது. இதுதான் ஆபத்தாக உள்ளது. இது நாட்டை மோசமான நடவடிக்கைக்கு இழுத்துச் செல்லும். இனிமேல் கோடீசுவரர் தான் மக்களவையிலும் சட்டமன்றத்தில் உறுப்பினர்களாக முடியும். மக்கள் பணத்திற்காக ஓட்டுப் போட்டு அவர் களிடத்தில் என்ன சேவையை எதிர்பார்க்க முடியும். அரசியல் பாழாகி விட்டது. பணம்தான் தான் என்ற நிலைமை உருவாகிவிட்டது என்றார்.