districts

img

படுகுழிகளாக உள்ள சாலை எப்போது சீரமைக்கப்படும்?

அறந்தாங்கி, ஜன.7 - படுகுழிகளாக போக்குவரத்துக்கு பயனற்று உள்ள சாலையை சீரமைக்கா விட்டால், ஜன.26 இல் வீடுகளில்  கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில்  ஈடுபடுவோம் என ஆவுடையார்கோ வில் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடை யார்கோவிலில் இருந்து குளத்துக்கு இருப்பு, பெருநாவலூர் வழியாக காரைக் குடி, அறந்தாங்கி உள்ளிட்ட ஊர் களுக்கு செல்கிற சாலை, ‌நபார்டு கிராமப் புற சாலை மேம்பாடு திட்டத்தில் இணைக் கப்பட்டுள்ளது. இந்த சாலை கடந்த 11 ஆண்டுகளாக செப்பனிடப்படாமல், படுகுழிகளாக போக்குவரத்துக்கு பயன்படுத்த முடி யாத நிலையில் உள்ளது. மணமேல் குடி மற்றும் ஆவுடையார்கோவில் தாலு காவில் உள்ள பொதுமக்கள், பல்வேறு பணிகளுக்காக இச்சாலையை பயன் படுத்துகின்றனர். இதனால் இச்சா லையை செப்பனிடக் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதெல்லாம், ‘சாலையை உடனே செப்பனிட்டு தருவதாக’ வாக்குறுதி கொடுத்த அதிகாரிகள், அதை நிறை வேற்றாமல் ஏமாற்றுகின்றனர்.  எனவே சம்பந்தப்பட்ட அதிகாரி களை கண்டித்தும், அரசு உடனடியாக சாலையை செப்பனிட்டு தரக் கோரியும்  ஜனவரி 26 (குடியரசு தினம்) அன்று, இந்த சாலையை பயன்படுத்தும் குளத்துக்கு இருப்பு, பெருநாவலூர் -  அண்ணாநகர், தனியனேந்தல், மீனாங் குடியிருப்பு, பனியன் குடியிருப்பு, செபஸ் தியார்புரம் - இந்திரா நகர், முள்ளி யான்வயல், சின்னவீரமங்களம், வானி யன்குடியிருப்பு, காமராஜர் நகர், மகிலங்கோட்டை - சேதுராமன்வயல், செல்லப்பன்கோட்டை, பெரிய வீரமங்க ளம், செங்கீரை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளில்  கருப்புக்கொடி ஏற்றி போராட உள்ள னர்.  மேலும், பிப்ரவரி 15 அன்று தங்க ளின் குடும்ப அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் அட்டை ஆகிய வற்றை ஆவுடையார்கோவில் வட்டாட் சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித் துள்ளனர்.