கரூர், ஆக.7-
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாத, பொதுத்துறை களை பாதுகாக்காத, தொழி லாளர் சட்டங்களை அமலாக் காத, மக்கள் விரோத, தொழி லாளர் விரோத ஒன்றிய மோடி அரசின் நாசகரக் கொள்கை களுக்கு எதிராக அனைத்து மத்திய, மாநில தொழிற்சங்கங் கள் சார்பாக ஆக.9 வெள்ளை யனே வெளியேறு தினத்தில் சென்னை மாநகரத்தில் பெருந் திரள் அமர்வு நடைபெற உள் ளது.
இந்த போராட்டத்தை விளக்கி கரூர் உழவர் சந்தை யில் மக்கள் சந்திப்பு தெரு முனை பிரச்சார கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு தொ.மு.ச. பேரவை மாவட்ட தலைவர் வி.ஆர்.அண்ணா வேலு தலைமை வகித்தார். எல்பிஎப் மாவட்ட செயலாளர் பழ.அப்பாசாமி முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தம் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எம். சுப்பிரமணியன் மற்றும் பல்வேறு தொழிற்சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பேசினர்.