districts

img

கலைஞர் நூற்றாண்டு விழா கவிதைப் போட்டியில் முதலிடம் பெற்ற மாணவி

தஞ்சாவூர், அக்.29 - தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மத்திய மாவட்ட திமுக  கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில்,  பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, திரைப்பட வசனங்கள் ஒப்புவித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டி கள் நடத்தப்பட்டன.  இப்போட்டியில், பூதலூர் வட்டம் ராய முண்டான்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி 9  ஆம் வகுப்பு மாணவி பா.காருண்யா கவிதை ஒப்புவித்தல் போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று ரூ.5,000 ரொக்கம் மற்றும் கேடயம் பரிசாகப் பெற்றார்.  மாணவிக்கு, திருவையாறு சட்டமன்ற உறுப் பினர் துரை.சந்திரசேகரன் பரிசு வழங்கிப் பாராட்டினார்.  மாணவி பா.காருண்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.பாஸ்கரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.