districts

திருச்சி முக்கிய செய்திகள்

கூடுதல் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வருகை'

பாபநாசம், ஏப்.2 - மக்களவைத் தேர்த லையொட்டி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாக கிடங்கில்  இருந்து பாபநாசம் சட்டமன்ற தொகுதிக் குரிய கூடுதலாக 361 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வாக னம் மூலம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாது காப்புடன் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலு வலகத்திற்கு எடுத்து வரப்பட்டது.   இதனை பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்து கிருஷ்ணன், பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், பாபநாசம் வட்ட வழங்கல்  அலுவலர் அருண கிரி, தேர்தல் துணை  தாசில்தார் விவேகா னந்தன், முதுநிலை வரு வாய் ஆய்வாளர் வரத ராஜன் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், பாபநா சம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள  பாதுகாப்பு வைப்பறை யில் வைக்கப்பட்டு சீல் இடப்பட்டது.

குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது 

தஞ்சாவூர், ஏப்.2-  தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பழவத்தான்கட்டளை, பாரதி நகரில் வசிக்கும் சரண்ராஜ் (22) என்பவர் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் ஆசிஷ் ராவத் பரிந்துரையின் பேரில், சரண்ராஜை குண்டர் தடுப்பு சட்டத் தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து,  அவரை காவல்துறை யினர் கைது செய்து கட லூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். 

பறிமுதல் செய்த  பணம் விடுவிப்பு 

தஞ்சாவூர், ஏப்.2-  மக்களவைத் தேர் தலையொட்டி தேர்தல் நடத்தை விதி முறைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளன.  இந்நிலையில், தஞ்சை மாவட்டத்தில் வாகன சோதனையில் விதிமீறலின் காரணமாக பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பணம் ரூ.9.78  லட்சத்திற்கு உரிய ஆவ ணங்கள் சமர்ப்பிக்க பட்டன. அதன்படி, மேல் முறையீட்டு குழுவின ரால் ஆய்வு செய்யப் பட்டு திங்கள்கிழமை அந்தப் பணம் விடுவிக்கப் பட்டது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

ஆசிரியரிடம் நகை பறிக்க  முயன்றவர்கள் கைது

அரியலூர், ஏப்.2 - அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள  கீழப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்செல்வம். திங்கள் கிழமை காலை இவர், பள்ளிக்கு நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவர் கழுத்தில் அணிந் திருந்த தங்கச் சங்கிலியை பறிக்க முயற்சித்தனர். சுதாரித்துக் கொண்ட ஆசிரியர் செந்தில்செல்வம் கூச்சலிட்டதையடுத்து, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையறிந்த அப்பகுதி இளை ஞர்கள், நகையை பறிக்க முயற்சித்த இருவரை துரத்திச் சென்று பிடித்து செந்துறை காவல் நிலை யத்தில் ஒப்படைத்தனர். அங்கு காவல்துறையினர் மேற்கொண்ட விசார ணையில், அவர்கள் நாமக்கல் மாவட்டம், சௌந்தர சோழபுரம், பக்ரிப்பாளையம் வெப்படை பகுதியைச்  சேர்ந்த சரவணன்(29), விழுப்புரம் மாவட்டம் ஆயத் தூர், புதுமனைத் தெருவைச் சேர்ந்த ஆமோஸ் பெர்னாண்டஸ் என்பதும், இவர்கள் பல்வேறு இடங்களில் இது போன்ற குற்றச் செயல்களில் ஈடு பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல்  துறையினர் வழக்குப் பதிந்து அவர்களை கைது செய்தனர்.

சட்டமன்றத் தொகுதி  ஒதுக்கீடு செய்யும் பணி

திருவாரூர், ஏப்.2 - திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நாடாளு மன்றத் தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு, சட்டமன்ற தொ குதி ஒதுக்கீடு செய்யும் பணி தஞ்சா வூர் நாடாளுமன்றத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் லு.கி கேட்டோ சேம மற்றும் திருவாரூர் மாவட்ட தேர்தல் அலுவலர் தி. சாருஸ்ரீ தலைமையில் நடை பெற்றது. இதில் மொத்தம் 1183 வாக்குச்சாவடி மையங்களுக்கு 5801 அலுவலர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர்.  மாவட்ட எஸ்.பி. எஸ்.ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் கு. சண்முகநாதன், உதவி தேர்தல்  நடத்தும் அலுவலர்கள், வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திரு வாரூர்), கீர்த்தனா மணி (மன் னார்குடி) உள்ளிட்ட அரசு அலுவ லர்கள், அரசியல் கட்சி பிரதிநிதி கள் கலந்து கொண்டனர்.

பாஜக-அதிமுக கள்ளக்கூட்டணி என்பதை சூசகமாக வெளிப்படுத்திய பிரேமலதா!

புதுக்கோட்டை, ஏப்.2 - தமிழகத்தில் பாஜகவும் அதிமுகவும் கள்ளக் கூட்டணி வைத்திருக்கிறது என்பதை புதுக்கோட்டை பிரச்சாரக் கூட்டத் தில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா சூசகமாக வெளிப்படுத்தினார். திருச்சி தொகுதியில் அதிமுக வேட்பா ளர் ப.கருப்பையாவை ஆதரித்து, புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா திங்கள்கிழமை மாலை பிரச்சாரம் செய்வார்  என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி ‘அழைத்து’ வரப்பட்ட சுமார் 200 பேரை தக்க வைப்பதற்காக மேடை அமைத்து ரெக்கார்டு டான்ஸ் நடைபெற்றது.  பிரேமலதாவை வரவேற்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பூசணிக்காய்கள், தேங்காய்கள் வரிசையாக வைக்கப்பட்டி ருந்தன. குடிபோதையுடன் பூசணிக்காயை வைத்திருப்பவர்கள் தயவுசெய்து அதை  வேறு ஒருவரிடம் கொடுத்து விடும்படி,  தேமுதிக விசுவாசி ஒருவர் ஒலிபெருக்கி யில் விளம்பரப்படுத்திக் கொண்டே இருந்தார்.  இதனைத் தொடர்ந்து இரவு 9.36 மணிக்கு, வேட்பாளருடன் வருகை தந்த  பிரேமலதா, தனது பிரச்சாரத்தை தொடங்கி னார். பிரச்சாரம் முடிவடையும் நேரம் இரவு  10 மணி. இடைப்பட்ட 24 நிமிடம், தேர்தல்  பிரச்சாரம் செய்வதற்கு ‘கன்டெண்ட்’ கிடைக்காமல் அவர் தடுமாறியதைப் பார்க்க முடிந்தது. திரும்பத் திரும்ப அவர்  அதிகம் பேசியது, “2011-ல் ஜெயலலிதா வும் விஜயகாந்தும் கூட்டணி அமைத்து சட்ட மன்றத்தில் வெற்றி பெற்றதைப் போல, இந்தத் தேர்தலிலும் மகத்தான வெற்றி பெறுவோம்” என்பதே.  அப்போது, ‘ஜெயலலிதாவுக்கு  இருந்த செல்வாக்கு எடப்பா டிக்கும், விஜயகாந்துக்கு இருந்த ஆதரவு உமக்கும் இல்லை’ என்று அழைத்து வரப்பட்டவர்களே நக்கல டித்ததைப் பார்க்க முடிந்தது. அடுத்து, அதிமுக நான்கு எழுத்து, தேமுதிக நான்கு எழுத்து, தேர்தல் நான்கு  எழுத்து, கூட்டணி நான்கு எழுத்து என்ப தோடு நிற்காமல், முடிவு தெரியப் போவ தும் ஜூன் 4 அன்று. ஆகவே, இந்தக் கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்று தனது தேர்தல் வியூகத்தை நாட்டு மக்களுக்குத் தெரியப்படுத்தினார்.  மேலும் மறைந்த எம்ஜிஆர், ஜெய லலிதா, விஜயகாந்த் ஆகிய மூவரும் இந்தக் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்வார்கள் என்று ஒரு போடு  போட்டு, அங்கிருந்தவர்களை கிறுகிறுக்கச்  செய்தார். கள்ளக்கூட்டணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள் அதிமுகவும், பாஜகவும் பிரிந்து நிற்பது நாடகம். அவர்களிடையே கள்ளக் கூட்டணி  உள்ளது என்பதை தொடர்ந்து அம்பலப் படுத்தி வருகின்றனர். இது உண்மை என்ப தற்கு ஆதாரமாக பிரேமலதாவின் பேச்சு அமைந்தது. அதாவது, மோடி தலைமையிலான பாஜக 200 இடங்களுக்கு மேல் தாண்டாது  என கருத்துக் கணிப்பு சொல்கிறது; இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி அதிக இடங்களை பெற்றால் நாம்  நினைத்ததை சாதிக்கலாம் எனத் திருவாய்  மலர்ந்தார். அதாவது, தேர்தலுக்குப் பிறகு  நாங்கள் பாஜக கூட்டணியில் கரைந்து விடுவோம் என்பதைத்தான் அப்படிச் சொல் கிறார். இதன்படி, பாஜக-அதிமுக கள்ளக்  கூட்டணி என்பதை தேமுதிக பொதுச் செய லாளர் பிரேமலதாவே போட்டு உடைத் துள்ளார்.

கழனிவாசல் பொது விநியோகத் திட்ட அங்காடியில் தீ விபத்து

தஞ்சாவூர், ஏப்.2-  தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவா சத்திரம் ஒன்றியம், கழனிவாசல் பொது  விநியோகத் திட்ட அங்காடியில் திங்களன்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தைச் சேர்ந்த, கழனி வாசல் கிராமத்தில் சாலையோரம் உள்ள பூட்டியிருந்த பொது விநியோகத் திட்ட அங்காடியில், திங்கள்கிழமை இரவு 10  மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு  புகை வெளியானது. இதைப் பார்த்த  மக்கள் பேராவூரணி தீயணைப்பு நிலையத் திற்கு தகவல் தெரிவித்தனர்.  உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அங்காடியில் இருப்பு வைக்கப்பட்டிருந்த 2,500-க்கும் மேற்பட்ட  காலியான சணல் சாக்குகள், 55 மூட்டை  அரிசி, 5 மூட்டை சீனி, 100 கிலோ பருப்பு,  பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் தீயில் எரிந்து நாசமாயின.  அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில்  மண்ணெண்ணெய் இருப்பு வைக்கப்பட்டி ருந்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப் பட்டது. மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டி ருக்கலாம் என கூறப்படுகிறது.  தீ விபத்து குறித்து அங்காடி விற்பனை யாளர் ஆறுமுகம் வருவாய்த்துறை, வட்ட  வழங்கல் துறை, கூட்டுறவுத் துறை அலு வலர்களுக்கு தகவல் தெரிவித்து, காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். இதை யடுத்து சம்பவ இடத்தை பொதுவிநி யோகத் திட்ட கூட்டுறவு சார்பதிவாளர் ரமேஷ்குமார், ரெட்டவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் செயலாளர் (பொ) தெட்சிணாமூர்த்தி ஆகி யோர் சேதம் குறித்து ஆய்வு செய்தனர்.  தீ விபத்து குறித்து பேராவூரணி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாக்குச்சாவடி அலுவலர்களுடன் கலந்துரையாடல்

பாபநாசம், ஏப்.2 - மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வை யாளர் கன்குராஜ் ஹெச் பகடே தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அலு வலகத்தில் வி.ஏ.ஓ.க்கள், வி.ஏ.ஓ உதவியாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடி, இதுவரை செய்யப்பட்டுள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார்.  மேலும் வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு குடிநீர், கழிப்பிட வசதி, மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சக்கர நாற்காலி வசதி  உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் இருப்பதை உறுதிசெய்ய அறி வுறுத்தினார். இதில் பாபநாசம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  பின்னர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப் பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை பார்வையிட்டார்.

உளுந்து பயிரில் நோய் பாதிப்பு: கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

உளுந்து பயிரில் நோய் பாதிப்பு: கட்டுப்படுத்தும் வழிமுறைகள் பாபநாசம், ஏப்.2- உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோய் பாதிப்பை தடுக்கும் வழிமுறைகள் குறித்து தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் விடுத் துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பாபநாசம் வட்டாரத்தில் தற்போது சம்பா சாகுபடிக்கு பின்  உளுந்து பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது நிலவி வரும் தட்பவெப்ப காரணங்களினால் உளுந்து பயிரில்  மஞ்சள் தேமல் நோய் பாதிப்பு காணப்படுகிறது.  இந்த நோயானது ஒருவகை வைரசால் உண்டாக்கப் பட்டு, வெள்ளை ஈக்களினால் மற்ற பயிர்களுக்கு பரப்பப்படு கிறது. இந்த வைரஸ் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்திட பின்வரும் காரணிகளை கடைப்பிடிக்க வேண்டும். உளுந்து விதைகளை விதைப்பதற்கு முன் ஒரு கிலோ  விதைக்கு போராக்ஸ் மருந்து 2 கிராம் மற்றும் நொச்சி இலைச்சாறு 300 மில்லி என்ற கரைசலில், 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் இமிடாகுளோபிரிட் 60 எஃப்.எஸ் 5 மில்லி  என்ற அளவில் விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும். ஒரு ஹெக்டேருக்கு 2.5 கிலோ பேஸில்லஸ்சப்டிலிஸ் பாக்டீ ரியா 250 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இட வேண்டும்.  வரப்பு பயிராக மக்காச் சோளத்தினை பயிரிடுவதன் மூலம்  வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம். விதைத்த 25 ஆவது நாளில் வைரஸ் நோய் பாதிப்பு தென்பட்டால், பாதிக்கப்பட்ட  செடியை முழுமையாகப் பிடுங்கி அகற்றிட வேண்டும். ஒரு  ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் மஞ்சள் ஒட்டு பொறி  வயலில் வைப்பதால் வெள்ளை ஈ நடமாட்டத்தை கட்டுப்ப டுத்தலாம். மேலும் போராக்ஸ் 0.1 சதவீதம் மற்றும் நொச்சி  இலைச்சாறு 10 சதவீதம் என்ற அளவிலான கரைசலை விதைத்த 30 ஆவது நாள் இலை வழியாக தெளிப்பதன் மூலம்  இந்நோயை கட்டுப்படுத்தலாம்.  மஞ்சள் தேமல் நோயின் தாக்கம் அதிகமாக காணப் பட்டால், அசிட்டாமிப்ரிட் 20 எஸ்பி என்ற ரசாயன பூச்சிக் கொல்லியை ஒரு ஹெக்டேருக்கு 250 கிராம் என்ற அளவில்  தெளிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். மேற்கண்ட கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்தி அதிக மகசூல்  பெற்றிடலாம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செகந்திராபாத்-இராமநாதபுரம் சிறப்பு விரைவு ரயில் மீண்டும் இயக்கப்படும் தென் மத்திய ரயில்வே அறிவிப்பு

தஞ்சாவூர், ஏப்.2-  செகந்திராபாத்திலிருந்து நல்கொண்டா, குண்டூர், தெனாலி, நெல்லூர், கூடூர், சென்னை - எழும்பூர், செங்கல்பட்டு, விழுப்பு ரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்து றைப்பூண்டி, முத்துப்பேட்டை, அதிராம்பட்டி னம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மானாமதுரை வழியாக இயங்கிய  (வண்டி எண். 07695 /07696) செகந்திராபாத் - இராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு  ரயில் ஏப்ரல் 3 முதல் 26 ஆம் தேதி வரை மூன்று  மாதங்களுக்கு (13 சேவைகள்) இயக்கப்பட  உள்ளதாக தென் மத்திய ரயில்வே அறி வித்துள்ளது. இந்த வழித்தடத்தில் 28.4.2022 முதல் ஏற்கனவே இயக்கப்பட்ட இந்த சிறப்பு ரயில்,  சில மாதங்களாக தற்காலிகமாக இயக்கப் படாமல் இருந்தது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், வர்த்தகர்கள் மற்றும் பட்டுக்கோட்டை என்கான்ஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத் தின் தலைவர் விவேகானந்தம் ஆகியோர் ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்தி ருந்தனர். மேலும், இந்த வழித்தடத்தில் தற்போது  இயக்கப்படும் தாம்பரம் - செங்கோட்டை - தாம்பரம் அதிவிரைவு ரயில் தாம்பரத்துடன் நிறுத்தப்படும் நிலையில், இந்த ரயில் சென்னை எழும்பூர் வரை இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.  இந்த ரயில் சேவை பகல் நேரத்தில் இயக்கப்படுவதால், சென்னைக்கு தனியாக செல்லும் பெண்கள், முதியவர்களுக்கு உதவியாக இருக்கும். இந்த ரயிலை தொ டர்ந்து சாதாரண கட்டணத்தில் இயக்க வேண்டும். பேராவூரணி போன்ற ரயில் நிலையங்களில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேராவூரணி வர்த்தக  கழகப் பிரமுகர் விநாயகா எஸ்.கந்தப்பன் கோரிக்கை விடுத்துள்ளார்.