districts

img

அண்ணல் அம்பேத்கர் நினைவு தினம்: சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தமுஎகச மரியாதை

திருச்சிராப்பள்ளி, டிச.6-  சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 66-ஆவது நினைவு தினத்தையொட்டி தமிழகத்தின் பல பகுதிகளில் அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமுஎகச உள்ளிட்ட அமைப்புகள், அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னதுரை எம்எல்ஏ., திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மயிலாடுதுறை அரசு போக்குவரத்து பணிமனை அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சிஆர்சி அருகில் கட்சியின் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் உள்ளிட்டோர் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.