தஞ்சாவூர், ஆக.4 - தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தில் தஞ்சாவூரில் கரந்தை புறநகர் கிளை, ஜெபமாலைபுரம் நகரக் கிளை என இரு கிளைகள் இயங்கி வருகிறது. இதில், தஞ்சாவூர் நகரக் கிளையில் பணி புரிந்து வரும் ஓட்டுநர், நடத்துநர்கள் சமூக விரோதிகளால் தாக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. இந்த ஒரு வரு டத்தில் மூன்றாவது சம்பவமாக ஜெபமாலை புரம் நகரக் கிளை ஓட்டுநர் காளிதாஸ், தற்செ யல் நடத்துநர் தினசீலன் ஆகிய இருவரும், ஆக.2 அன்று சுமார் மாலை 4.30 மணியள வில் கான்வென்ட் மேம்பாலம் வளைவில் திரும்பும்போது சமூக விரோதிகளால் கொடூ ரமாக தாக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் நகரக் கிளை யில் நடைபெற்ற மூன்றாவது சம்பவம் ஆகும். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்தாலும், தாக்கப்படும் சம்பவம் தொடர் கதையாகித்தான் வருகிறது. பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. ஓட்டுநர்-நடத்துநர் தாக்கப்பட்டதை கண்டித்தும், பாதுகாப்பு வழங்க வலியுறுத்தி யும், மாவட்ட காவல்துறை தீவிர கண் காணிப்பை தொடரவும் வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஜெப மாலைபுரம் தஞ்சாவூர் நகரக் கிளை முன்பு ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிஎம்சி தொழிற் சங்க துணைப் பொதுச் செயலாளர் ஆர். சுப்பிரமணியன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ஏஐடியுசி சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் துரை.மதிவா ணன், கும்பகோணம் போக்குவரத்து சங்க பொதுச் செயலாளர் எஸ்.தாமரைச்செல் வன், பொருளாளர் சி.ராஜமன்னன், சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, மத்திய சங்க தலைவர் டி.காரல் மார்க்ஸ், பொருளாளர் எஸ்.ராமசாமி, ஐஎன்டியுசி முன் னாள் பொதுச் செயலாளர் செயலாளர் என்.மோகன்ராஜ், டிஎம்எம்கே பொருளாளர் ரமேஷ்குமார், கரந்தை சிஐடியு புறநகர் கிளை பொருளாளர் ராஜசேகர், நகர் கிளை செயலாளர் சந்திரசேகர், ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் திருநாவுக்கரசு, ஜீவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.