districts

img

குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன பேருந்து

திருவனந்தபுரம், செப்.18- பயணிகளுக்கு குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன பேருந்து வசதியை வழங்கும் கேஎஸ்ஆர்டிசியின் ஜனதா சாய்தள பேருந்து சேவை திங்களன்று (செப்.18) தொ டங்கியது. கேஎஸ்ஆர்டிசி ஜனதா பேருந்துகள் முதலில் கொல்லம் - திருவனந்தபுரம், கொட்டாரக்கரா - திருவனந்த புரம் வழித்தடங்களில் இயக் கப்படும். சோதனை அடிப்படை யில் இந்த சேவை நடத்தப்படும். கே.எஸ்.ஆர்.டி.சி கொல் லம் டெப்போவில் காலை 7 மணிக்கு மேயர் பிரசன்னா எர்ன்ஸ்ட் கொடியேற்றுகிறார். ஜனதா பேருந்தில் குறைந்த பட்ச டிக்கெட் விலை ரூ.20. கொல்லம் மற்றும் கொட்டா ரக்கராவிலிருந்து தலைமைச் செயலகம் வழியாக தம்பானூ ரை சென்றடையும் வகையில் இந்த சேவை ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் உட்பட தினசரி பயணிகளை குறி வைத்து கேஎஸ்ஆர்டிசி ஜனதா சேவை தொடங்கப்படு கிறது. ஜனதா சேவை கொல் லம் மற்றும் கொட்டாரக்கரா விலிருந்து 7.15 மணிக்கு தொ டங்குகிறது. இந்த இரண்டு பேருந்துகளும் காலை 9.30 மணிக்கு தலைமைச் செயல கம் அருகே வந்தடையும். மீண்டும் மாலை 4.45 மணிக்கு தம்பானூரில் இருந்து மகளிர் கல்லூரி, பேக்கரி சந்திப்பு வழியாக தலைமைச் செயலக கண் டோன்மென்ட் கேட்டை சென்ற டையும். இங்கிருந்து கொல் லம் மற்றும் கொட்டாரக்கரா வுக்கு ஐந்து மணிக்குப் புறப் படும். மாலை, இரண்டு பேருந் ந்துகளும் 7.15 மணிக்கு கொ ல்லம் மற்றும் கொட்டாரக்கரா சென்றடையும். ஜனதா சர்வீஸ் கேஎஸ் ஆர்டிசியின் பாஸ்ட் பாசஞ்ச ரின் அனைத்து நிறுத்தங்க ளையும் கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை வெற்றி பெற்றால், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கேஎஸ்ஆர்டிசி ஜனதா சேவை தொடங்கப்படும். ஊழியர்கள் மாவட்ட அலுவலகங்களை அடையும் வகையில் சேவைக ளின் நேரம் முடிவு செய்யப் படும்.