districts

img

கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும்

தஞ்சாவூர், நவ.15-  பள்ளி, கல்லூரிகள் தொடங்கும், முடிவடையும் நேரங்களில், மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில், ஆபத்தான முறையில் தொங் கிக் கொண்டு பயணம் செய்  யும் சூழலை தடுக்கும் வகை யில், கூடுதல் பேருந்து வசதி யை ஏற்படுத்தி தர வேண்டும். பேருந்தில் பயணிக்கும் மாணவர்களிடம், நடத்து நர்கள் தகாத வார்த்தையில் பேசினால் ஒழுங்கு நடவ டிக்கை எடுக்க வேண்டும். தொலைதூரத்தில் இருந்து கல்வி நிலையங்களுக்கு வரும் மாணவர்கள் பயன்  பெறும் வகையில், இலவச பேருந்து பயண அட்டையில் கிலோ மீட்டர் தூரத்தை அதி கரிக்க வேண்டும்.  அனைத்து பேருந்து நிறுத்தத்திலும் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி இந்திய மாணவர் சங்  கம் சார்பில், தஞ்சாவூர் சர போஜி கல்லூரி முன்பு செவ்  வாய்க்கிழமை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஆர்ப்பாட்டத்திற்கு, இந் திய மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார் தலைமை வகித்தார். மாவட்டத் தலை வர் அர்ஜூன் கண்டன உரை யாற்றினார். கிளை நிர்வாகி கள் கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.