districts

img

மயிலாடுதுறையில் திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை

மயிலாடுதுறை, மே 30-  மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட ரங்கில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திரு நங்கைகளின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த தேவை யான நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்  ஏ.பி.மகாபாரதி  தலைமை யில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  மயிலாடுதுறை நக ராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் மற்றும் வரதாச்சாரியார் பூங்கா அமைந்துள்ள சாலை ஆகிய பகுதிகளில் மே 28 அன்று நள்ளிரவில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ள சாலைகளில் திருநங்கைகள் நின்றதை பார்த்த மாவட்ட ஆட்சியர்,  அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக் கப்படும் எனக்கூறினார்.   இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலு வலக கூட்டரங்கில் மயிலாடு துறை மாவட்டத்தில் உள்ள திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம் படுத்த தேவையான நடவ டிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத் தில் உள்ள 42 திருநங்கை களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வும், அவர்களின் கோரிக்கை யின்படி அவர்களுக்கு தேவைகளான குடியிருப்பு பட்டா,குடும்ப அட்டை, சுய தொழில் தொடங்க தேவையான கடனுதவிகள் போன்றவைகள் வழங்க உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவ லர், மாவட்ட சமூகநல அலு வலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆகி யோரிடம் மாவட்ட ஆட்சி யர்  அறிவுறுத்தனார். திரு நங்கைகள் வாழ்க்கை  தரத்தை மேம்படுத்திக் கொள்ள தேவையான நலத்திட்டங்களை மாவட்ட சமூக நல அலுவல கம் வாயிலாக பெற்றுக் கொண்டு வாழ்க்கையில் உயர வேண்டும் என அறி வுறுத்தினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. மணிமேகலை, துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மற்றும்   திரு நங்கைகள் கலந்து கொண்ட னர். 

;