கும்பகோணம், ஜூலை 10-
தஞ்சாவூர் மாவட்டம், கும்ப கோணம் அருகே பட்டீஸ்வரம், தேனு புரீஸ்வரர் கோவில் நிர்வாகத்தின்கீழ் உள்ள கோபிநாதப் பெருமாள் கோவிலில் ரூ.2.50 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
இதற்காக, கோவில் எல்லையை வரையறுக்கும் பணியில் கோவில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந் நிலையில், கும்பகோணம் அருகே சோழன் மாளிகை பகுதியில் இடிந்து தரைமட்டான நிலையில் உள்ள பழ மையான கட்டிடத்தில் இருந்த செடி, கொடிகளை அகற்றி எல்லைக் கல்லை தேடினர்.
அப்போது, மண்ணில் புதைந்து கிடந்த கலைநயத்துடன் கூடிய தவ்வை, இந்துராணி, பிரம்மி, வராஹி உள் ளிட்ட சப்த கன்னியர் சிலையும், நட ராஜரின் கால் பகுதி என மொத்தம் எட்டு கற்சிலைகள் இருப்பதையும் கண்டுபிடித்தனர். சிலைகள் கண்டெ டுக்கப்பட்ட இடம் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமானது என தெரியவந்தது. ஆதிகும்பேஸ்வரர் கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணகுமார் இந்தச் சிலைகளை ஆய்வு செய்தார்.
இதுகுறித்து புலவர் செல்வசேக ரன் கூறுகையில், “சோழன்மாளிகை பகுதிகளில் பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்த சிலைகள் குறித்து தொல்லியல் துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிலைகள் இருக்கிறதா என ஆய்வு நடத்தப்பட உள்ளது” என்றார்.