districts

img

விளையாட்டு மாணவர்கள் 25 பேருக்கு ஜெர்சி ஆடைகளை வழங்கப்பட்டது

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரோட்டரி கிளப் சார்பில் பாபநாசம் வித்யா பாடசாலையில் படிக்கும், விளையாட்டு மாணவர்கள் 25 பேருக்கு ஜெர்சி ஆடைகளை வழங்கப்பட்டது. பாடசாலை பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர் செந்தில்நாதன் ஜெர்சி ஆடைகளை வழங்கினார். இதில் பள்ளித் தலைமையாசிரியர் ஜாக்குலின் மேரி, ரோட்டரித் தலைவர் செல்வக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.