districts

சாலை விபத்தில் 15 பெண்கள் காயம்

புதுக்கோட்டை, ஆக.13-

      புதுக்கோட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 15 கூலித்  தொழிலாளர்கள் காய மடைந்தனர்.

    புதுக்கோட்டை முத்துக் கோன்பட்டியைச் சேர்ந்த வர் குமார்(55). இவர் தனக்குச் சொந்தமான சரக்கு வாகனத்தில் 15 பெண் களை திருமயம் அருகே நச்சாந்துப்பட்டிக்கு விறகு  ஏற்றுவதற்காக ஞாயிற்றுக் கிழமை அழைத்துச் சென்றுள்ளார். அப்போது திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பிரிவு சாலை யில் எதிரே வந்த பொலிரோ  வாகனம் மோதி விபத்துக் குள்ளானது.  

     இந்த விபத்தில் சரக்கு  வாகன ஓட்டுநர் மற்றும் 15  பெண்களும் பலத்த காய மடைந்தனர். இவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருக்கோகர்ணம் போலீ சார் விசாரணை நடத்தி வரு கின்றனர்.