சின்னாளப்பட்டி, டிச.2- திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே ஜல் லிக்கட்டு விழிப்புணர்வு மாரத் தான் போட்டி நடைபெற்றது. கே.சிங்காரக்கோட்டை பி.வி.பி கல்லூரி, பண்ணை சேதுராமன் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையம், கெயின்அப் மில் இணைந்து ஜல்லிக்கட்டு குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மாரத்தான் போட்டி நடைபெற்றது.
மாணவர்கள் பிரிவிற்கு வத்தலக்குண்டு காளியம் மன் கோவில் முதல் கே. சிங்காரக்கோட்டை வரை 7 கி.மீட்டர் தூரமும், மாணவி கள் பிரிவிற்கு 5 கி.மீட்டர் தூர மும் இலக்காக நிர்ணயிக்கப் பட்டது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
மாணவர்கள் பிரிவில் முதல் பரிசு கருத்தப் பாண்டி, 2ம் பரிசு கண்ணன், 3ம் பரிசு தயாசாகர் ஆகி யோர் வென்றனர். மாணவி கள் பிரிவில் முதல் பரிசு நேகா, 2ம் பரிசு வினோதினி, 3ம் பரிசு அஷ்வினி ஆகியோர் வென்றனர். வெற்றி பெற்றவர் களுக்கு திண்டுக்கல் நாடா ளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் பரிசுகளை வழங்கினார்.
முன்னதாக போட்டிகளை சென்னை கோரா ஓவர்சீஸ் நிறுவன தலைவர் ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இவ்விழா வில் பிவிபி கல்லூரி தாளா ளர் செல்வம் தலைமை தாங் கினார். சாய்ஸ் அகடாமி நிறு வனர் முத்து கணேஷ் நன்றி கூறினார்.