திண்டுக்கல், பிப்.23- திண்டுக்கல்லில் மாநகராட்சி மற்றும் ஒன்றிய சிபிஎம் கவுன்சிலர்களின் சிறப்பான பணிகள் குறித்து பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர்கள் பேட்டி கண்டனர்.
புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்ட சென்டர் டி சயின்சஸ் ஹியூமென்ஸ் என்ற இணையதளத்திலிருந்து டாக்டர் ஸ்டெபானி டாவா லாமா என்பவரும் அவரது உதவியாளரும் திண்டுக்கல் மாமன்ற 2-ஆவது வார்டு சிபிஎம் உறுப்பினர் கே.எஸ்.கணேசன், சிபிஎம் செட்டிநாயக்கன்பட்டி ஒன்றியக் கவுன்சிலர் செல்வநாயகம் ஆகியோரை வியாழனன்று பேட்டி கண்டனர்.
அவர்களது ஆங்கில மொழி கேள்வி மற்றும் சிபிஎம் கவுன்சிலர்களின் பதில்களை மாதர் சங்க நிர்வாகியான மைதிலி மொழி பெயர்த்து கூறினார்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஆர்.சச்சிதானந்தம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.வசந்தாமணி, பி.ஆசாத், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் பாப்பாத்தி, வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் பிரேம் ஆகியோர் உடனிருந்தனர்.