districts

img

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வழக்கறிஞர் ஆ.மணி அறிமுக கூட்டம் இண்டூரில் நடைபெற்றது. இதில் தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் பெ.சுப்ரமணி, ஒன்றிய செயலாளர் வைகுந்தம், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் கே.என்.மல்லையன், பகுதிக்குழு செயலாளர் ராஜா, சிபிஐ மாவட்ட துணைச்செயலாளர் மாதேஸ்வரன், ஒன்றியச் செயலாளர் மாது, விசிக ஒன்றியச் செயலாளர் சந்தானமூர்த்தி, காங்கி ரஸ் ஒன்றியச் செயலாளர் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.