districts

மதுரை முக்கிய செய்திகள்

பட்டாசு தயாரித்த இருவர் பலி; ஒருவர் காயம்

சிவகாசி/திண்டுக்கல், அக்.3- சிவகாசி அருகே சட்ட விரோதமாக காலி மனை யில் கொட்டகை அமைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட  இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். சிவகாசி அருகே உள்ளது பூசாரித்தேவன்பட்டி. இங்கு  செல்வம் என்பவருக்குச் சொந்தமான காலி இடத்தில்,  எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த திருப்பதி என்பவர்  சட்டவிரோதமாக பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டு வந்துள்  ளார். இந்த நிலையில்  ஞாயிற்றுக்கிழமை அங்கு ஏற்பட்ட  வெடிவிபத்தில்  பட்டாசுத் தயாரிப்பில் ஈடுபட்டிருந்த உரி மையாளர் திருப்பதி மற்றும் அவரது உறவினர் நாகராஜ்  (19) ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், காயமடைந்து சிவகாசி அரசு மருத்து வமனையில்  சிகிச்சை பெற்று வந்த திருப்பதி, நாகராஜ் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்றொரு சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த வீரக்கல் கிராமத்தில் உள்ள முருகன் கோவில் தெரு பகுதியைச்  சேர்ந்தவர் ஈஸ்வரி (52). இவர் அதே பகுதியில் உள்ள    கோவிலுக்கு சொந்தமான இடத்தில் திறந்த வெளியில் அனுமதியின்றி பட்டாசுகள் தயாரித்து வந்ததாகத் தெரி கிறது. கரித்தூள், உப்பு, மற்றும் ஜிப்சம் போன்ற மூலப்  பொருட்களைக்  உரலில் இடித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் ஈஸ்வரி படுகாயம்  அடைந்தார். அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அவரை  மீட்டு திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். செம்பட்டி காவல்துறையினர் விசாரிக்கின்றனர்.

உலக மூத்த குடிமக்கள் தின கருத்தரங்கம்

சிவகாசி, அக்.3- சிவகாசியில் ஓய்வூதியர் அமைப்புகளின் ஒருங்கி ணைப்புக் குழு  சார்பில் உலக மூத்த குடிமக்கள் மற்றும்  ஓய்வூதிய பாதுகாப்பு தினக் கருத்தரங்கம் நடைபெற் றது. இந்நிகழ்விற்கு மாவட்டத் தலைவர் சந்திரராஜன்  தலைமை வகித்தார். திருப்பதி வரவேற்றார்.  அனைத்துத்  துறை மாவட்டச் செயலாளர் ராமசுப்புராஜ் துவக்கி வைத்து  பேசினார். ஏஐபிடிபிஏ மாவட்டச் செயலாளர் புளு காண்டி, வங்கி ஓய்வூதியர் அமைப்பு சார்பில் சி.மாரிக் கனி ஆகியோர் கருத்துரையாற்றினர்.  பி.எஸ்.என்.எல்  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முத்து சாமி வாழ்த்துரை வழங்கினர். திருத்தங்கல் மூத்த மருத்து வர் என்.தங்கவேலு “மூத்தோர் நலம்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். ஓய்வுபெற்ற மூத்த ஆசிரியர்  கா.சிவபெருமான் நிறைவுரையாற்றினார். ஜெயச்சந்தி ரன் நன்றி கூறினார். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

79 ஆடுகள் ஏலம் மாவட்ட ஆட்சியர் தகவல்

விருதுநகர், அக்.3- சாத்தூர் ஆட்டுப் பண்ணையில் பராமரிக்கப்பட்டு, கழிவு செய்யப்பட்ட கன்னி வெள்ளாடுகள் 49, செம்மறி  ஆடுகள் 30 என மொத்தம் 79 ஆடுகள் வரும் அக்.13-ஆம்  தேதி  காலை 11 மணிக்கு  புத்தக மதிப்புத் தொகையின்  அடிப்படையில் பொது ஏலம் விடப்படும் விருதுநகர்  மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தெரிவித்துள் ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:  ஏலத்தில்  கலந்து கொள்ள விரும்புவோர்    முன் தொகையாக ரூ.5  ஆயிரத்திற்கான வரைவோலையை தேசிய மயமாக்கப் பட்ட வங்கி மூலம் பெற்று அக்.12- ஆம் தேதி மதியத்திற்  குள் சாத்தூர் ஆட்டுப் பண்ணை துணை இயக்குநர் அலு வலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.   வங்கி வரைவோலையை, துணை இயக்குநர், ஆட்டுப்  பண்ணை, சாத்தூர்  என்ற முகவரிக்கு எடுக்க வேண்டும்.  முன்தொகை வங்கி வரைவோலையாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும். மேலும் விபரங்களுக்கு 7305708658  என்ற   எண்ணில்  அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார். 

வீட்டுமனைப் பட்டா கேட்டு மனு

சிவகங்கை, அக்.3- சிவகங்கை அருகே உள்ள நாமனூர், கீழப்பூங்குடி, அழகிச்சிப்பட்டி காளையார் கோவில், சேதுநகர்  பகுதி களை சேர்ந்த பெண்கள் திங்களன்று அகில இந்திய விவ சாயத் தொழிலாளர்கள் சங்க  மாவட்டத் துணைச் செய லாளர் முத்துக்கருப்பன், மகாலிங்கம் தலைமையில்  ஆட்சியரைச் சந்திந்து வீட்டுமனைப் பட்டா கேட்டு  கோரிக்கை மனு அளித்தனர்.

பிள்ளையார் நத்தத்தில் கிராமசபை கூட்டம்

திருவில்லிபுத்தூர், அக்.3- விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பிள்ளையார் குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சித் தலைவர் காசி என்ற கருப்பையா தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலர் கருப்பையா அனைவரையும் வரவேற்றார்.  திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மேலாளர் சம்பத் சீனிவாசன், வேளாண்மை பொறியியல் உதவி செயற்பொறியாளர் வைத்தியநாதன் ஆகியோர்  பார்வை யாளர்களாக கலந்து கொண்டனர்.  கிராம மக்களுக்கு  பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம், அரசுப் பள்ளிகளை  பழுதுபார்ப்பது, சாலை வசதி ஆகியவை குறித்து விவா திக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்  தில் துணைத் தலைவர் நாகராஜன், அரசு கால்நடை மருத்துவர் லட்சுமி, திருவில்லிபுத்தூர் ஊரக மின் வாரிய அதிகாரி காலடியான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கரூர் கல்குவாரி பிரச்சனை: 700 அடி ஆழம் தோண்டியுள்ளதாக புகார்

மதுரை, அக்.3- கரூரில் கல்குவாரிக்கு எதிராகப் போராடி யவர் லாரி ஏற்றி கொல்லப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித உரிமைக் காப்பாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. கல்குவாரியை நேரடியாக ஆய்வு செய்த பின் மனித உரிமைக் காப்பாளர்கள் சார்பில் திங்களன்று மதுரையில் நடைபெற்ற செய்தி யாளர் சந்திப்பில் சுயஆட்சி இந்தியா  தேசியத் தலைவர் கிறிஸ்டினா சாமி கூறியதாவது:- கரூர் மாவட்டத்தில் அரசின் அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரிக்கு எதிராகப் போராடிய குப்பம் ஊராட்சி காளிபாளையத்தைச் சேர்ந்த வர் ஜெகநாதன். சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிக்கு எதிராக கரூர் ஆட்சியரிடம் புகார்  மனுக்கொடுத்தார். இதையடுத்து அவர்  செப்.10 ஆம் தேதி வேன் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார்.  சம்மந்தப்பட்ட கல்குவாரியில் மனித உரி மைக் காப்பாளர்கள் கூட்டமைப்பின் சார்பில்  கள  ஆய்வு நடத்தப்பட்டது. கல்குவாரிகளில் அரசின்  விதியை மீறி பல்வேறு முறைகேடுகள் நடந்துள்  ளன. 150 அடி ஆழத்திற்கு அனுமதி பெற்று 700  அடிக்குமேல் தோண்டியுள்ளனர். இதனால்  அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்ட தோடு இயற்கைவளங்களும் அழிந்துள்ளன.  அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ள னர்.  இதில் நடந்த முறைகேடுகளைக் கண்டறிய தமிழ்நாடு அரசின் முதன்மைச்செயலர் தலை மையில் சிறப்புக்குழு அமைத்து அக்குழுவில் ஐஐடியில் கனிமவளத்துறை நிபுணர்கள், அண்ணா பல்கலைக்கழக தொழில்நுட்ப வல்லு நர்கள், வேளாண் பல்கலைக்கழக பேராசிரி யர்கள்,மனோன்மணீயம் சுந்தரனார் பல்க லைக்கழக பேராசிரியர்கள், கனிமவளத்துறை நிபுணர்கள் அடங்கிய குழு அமைத்து இதுவரை  வெட்டி எடுக்கப்பட்ட கனிம வளத்தின் அளவைக்  கணக்கீடு செய்து அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை அறிக்கையாக அளிக்க வேண்டும்.  திருச்சிராப்பள்ளி மண்டல ஐஜி சந்தோஷ் குமார் நேர்மையான விசாரணை நடத்தி தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அவ ரது குடும்பத்தினருக்கு தக்க பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் போராட்டம்

சிவகங்கை, அக்.3- சிவகங்கையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் 11 அம்ச கோரிக்  கையை வலியுறுத்தி ரத்த கையெழுத்திட்டு போராட்டம் நடத்தினர். சிவகங்கை ஆட்சி யர் அலுவலகத்தில் நடந்த ரத்த கையெ ழுத்திடும் போராட்டத்தில் மாவட்டத் தலை வர் வேலுச்சாமி தலைமை வகித்தார். செய லாளர் ராதாகிருஷ்ணன், மாவட்டத் துணைத் தலைவர் லுாயிஸ்பிரகாஷ், மக ளிர் துணைக்குழு முத்துலட்சுமி, பொருளா ளர் பெரியசாமி, பாலகிருஷ்ணன், தனபால்,  கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மானாமதுரையில் நடந்த போராட்டத் திற்கு செந்தில்குமார், செந்தில் பெரிய சாமி, திருப்புவனத்தில் பிச்சை, காளை யார்கோவில் குணசேகரன், கண்ணங்குடி ராதாகிருஷ்ணன், தேவகோட்டை வேல் முருகன், சாக்கோட்டை பெரியசாமி, திருப்புத்துார் பெரியசாமி,பாண்டி, சிங்கம்  புணரி மகாலிங்கம், எஸ்.புதுார் கும ரேசன், சிவகுருநாதன் ஆகியோர் தலைமை யில் ரத்த கையெழுத்திடும் போராட்டம் நடந்தது. இதில் 11 அம்ச கோரிக்கைகள் வலி யுறுத்தப்பட்டது.

ரயில்வே மருத்துவமனையின் அவலமும் நிர்வாகத்தின் ஊழியர் விரோதப் போக்கும்

திண்டுக்கல், அக்.3- திண்டுக்கல்லில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் ஏதாவது இருக்கிறதா  என்ற கேள்வியெழுந்துள்ள நிலையில் குறைவான ஊழியர்கள் பணியாற்றும் இந்த மருத்துவமனையில் ஊழியர் விரோதப் போக்கும் உள்ளது.  இங்குள்ள மருத்துவமனையில் மருத்துவமனையில் ஒரு மருத்துவர், ஒரு மருந்தாளுநர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவமனை ஊழியர் உள்ளிட்ட ஆறு பேர் பணியாற்றுகிறார்கள்.  இதனால் 24  மணி நேரமும் ஊழியர்கள் பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது. ஞாயிறு மட்டும் விடுமுறை. ஆனால் அவசரம் என்றால்  உட னடியாக பணிக்கு வர வேண்டும். இங்கு  படுக்கை வசதிகள் கிடையாது. போதிய  மாத்திரை-மருந்துகள் கிடையாது.   அவசர சிகிச்சைக்காக வரும் நோயாளி களுக்கு இங்கு சிகிச்சையளிக்க முடியாது.  மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவ மனைக்குத் தான் அழைத்துச் செல்ல வேண்  டும் இது தான் மருத்துவமனையின் நிலை. இந்த மருத்துவமனையில் ஊழியர் விரோதப்போக்கும் உள்ளதாக ஊழியர் ஒரு வர் குற்றம் சாட்டி திங்களன்று தர்ணாவில் ஈடுபட்டார். திண்டுக்கல் ரயில்வே மருத்துவமனை யில் மருத்துவமனை அலுவலக உதவி யாளராகப் பணியாற்றுபவர் ரவிச்சந்திரன். மணப்பாறையைச் சேர்ந்த இவர் கடந்த  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திண்டுக் கல் ரயில்வே மருத்துவமனைக்கு பணிமாறு தல் பெற்று வந்துள்ளார். இவர் கண் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மதுரையில் உள்ள ரயில்வே மருத்துவ மனையில் சிகிச்சைக்கு செல்ல வேண்டும்  என்று கடந்த 28-ஆம் தேதி மருத்துவ அதி காரியிடம்  கேட்டுள்ளார். அதற்கு அவர்  விடுப்புத் தரவில்லை. நோயின் கடுமையால் அவர் மதுரை ரயில்வே மருத்துவமனைக்கு 29ம் தேதி முதல்  தினசரி சென்று சிகிச்சை  பெற்று வந்துள்ளார். சிகிச்சை பெற்ற பின்  திங்களன்று  ரவிச்சந்திரன் மீண்டும் பணிக்கு  வந்துள்ளார். ஆனால் அவரை மருத்துவர்  மருத்துவமனைக்குள் அனுமதிக்க வில்லை. இதையடுத்து மருத்துவரின்  ஊழி யர் விரோதப் போக்கைக் கண்டித்து ரவிச்  சந்திரன் மருத்துவமனையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.  இந்த நிலையில் மருத்துவர் தனக்கு பாதுகாப்பு வேண்டும்  என்று திண்டுக்கல் வடக்கு காவல்நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரையடுத்து வடக்கு காவல்நிலைய காவல்துறையினர்- ரயில்வே காவல்துறையினரும் ரவிச்சந்திர னின் தர்ணாவிற்கு அனுமதி மறுத்தனர். இதற்கிடையே ரயில்வே தொழிற்சங்கத் தலைவர் மருத்துவரிடம் நடத்திய பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

உணவுத் தயாரிப்புப் செலவு கிடைக்காமல்   ஆறு மாதமாக தவிக்கும் சத்துணவு ஊழியர்கள்

தேனி, அக்.3- தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையங்களுக்கு  ஆறு மாத காலமாக உணவுத் தயா ரிப்புச் செலவினம் வழங்காததால் சத்துணவு ஊழியர்கள் கடனுக்குள் ளாகி வேதனையில் உள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநி லத் துணைத் தலைவர் பெ.பேயத்  தேவன் ,தேனி ஆட்சியருக்கு அளித்  துள்ள மனுவில் தெரிவித்துள்ளதா வது: தேனி மாவட்டத்திலுள்ள பள்ளி சத்துணவு மையங்களில் கடந்த ஆறு மாதங்களாக உணவுத் தயா ரிப்புச் செலவினத் தொகை (காய்  கறி, எரிபொருள், மசாலா பொருட்  கள் வாங்குவதற்கு) வழங்க வில்லை. அமைப்பாளர்கள் கடன் வாங்கி சத்துணவு மையங்களை நடத்தி வருகிறார்கள். இனியும் கடன் வாங்கி மையங்களை நடத்த இயலாது என்பதை கவலையுடன் பதிவு செய்கிறோம். தேனி மாவட்டத்தில் பணி புரிந்துவரும் சத்துணவு ஊழியர்  களுக்கு நாளது தேதி வரை  வேலை நிறுத்த கால ஊதியம்  வழங்கவில்லை. தேனி மாவட்டத் தில் சத்துணவு மையங்களில் பணி புரிந்து ஓய்வுபெறும் சத்துணவு  அமைப்பாளர்கள் ஓய்வு பெறுவ தற்கு மூன்று மாதங்களுக்கு முன்  னரே தணிக்கை முடித்து அரசு நிதி யிழப்பை செலுத்த ஏதுவாக தணிக்  கைத்துறைக்கு பரிந்துரை செய்ய வேண்டும்,  பணப்பலன்கள் ஓய்வு  பெறும் நாளில்  வழங்கவேண்டும். பள்ளி சத்துணவு மையங்க ளுக்கு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்  (சத்துணவு)  உதவிக் கணக்கு அலு வலரை  உடன் அழைத்துச் செல்கி றார். அவர் பள்ளி சத்துணவு மையங் களில் உணவு தயாரித்துள்ளதை பார்வையிட்டு முட்டைகளை எண்ணி  சரி பார்த்து விட்டுப் பதிவேடு களை அலுவலகத்திற்கு எடுத்துச்  சென்று குழந்தைகள் மற்றும் முட்டைகளை நேரில் எண்ணிய தற்கும் பதிவேட்டில் பதிவு செய் யப்பட்டதற்கும் வேறுபாடாக உள்ளது எனக் கூறி ஊழியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு  ஆயி ரக்கணக்கான தொகையை அர சிற்கு செலுத்தவேண்டுமென நிர்ப்  பந்திக்கிறார் இதனால் சத்துணவு ஊழி யர்கள் பாதிக்கப்பட்டு மன உளைச்  சலுக்கு ஆளாகி உள்ளனர்.எனவே உதவிக் கணக்கு அலுவலர் தமிழ்  நாடு சத்துணவு ஊழியர் சங்கத் திற்கு எதிரான மாற்று சங்கத்தில் மாவட்டச் செயலாளராக இருந்து  வருகிறார். அவரது சங்கத்தில்  உறுப்பினர்களை சேர்ப்பதற்காக மறைமுகமாக ஊழியர்களை மிரட்டி வருகிறார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்திற் கும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)  கவ னத்திற்கும் கொண்டு சென்றும்  நடவடிக்கை இல்லாத நிலையில்  தேனி மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் மன உளைச்சலோடு பணிபுரிந்து வருகிறார்கள் என் பதை பலமுறை கோரிக்கை கடி தம் மூலமும் நேரிலும் முறை யிட்டும் எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில் வேறுவழி யின்றி ஆக.14-ஆம் தேதி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்  கத்தின்  தேனி மாவட்டக் கிளை திட்ட மிட்டுள்ளது.  இவ்வாறு அந்த கடிதத்தில் தெரி வித்துள்ளார்.

காலமானார்

இராமநாதபுரம், அக்.3- இராமநாதபுரத்தைச் சேர்ந்த நாகராஜன் காலமா னார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கீழக்கரை தாலுகா  தலைவரும், ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தின்   மாவட்ட முன்னாள் தலைவருமான .நாகராஜன் உடல்நலக்  குறைவால் ஞாயிறன்று  இரவு இராமநாதபுரத்தில் உள்ள  தனியார் மருத்துவ மனையில் காலமானார். நாகராஜன் மறைவு செய்தி அறிந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் எம். முத்துராமு, மாவட்டச் செயலா ளர் மயில்வாகனன்,  கல்யாணசுந்தரம், முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழக்கரை தாலுகா  செயலாளர் மகாலிங்கம், தமிழ்நாடு ஆரம்பர்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாவட்ட நிர்வாகிகள் முனியசாமி, குல சேகரபாண்டியன், மற்றும் முத்துமுருகன், முரளி மோகன் ஆகியோர் நாகராஜன் இல்லத்திற்கு சென்று அவரது உடலுக்கு மாலையணிவித்து  அஞ்சலி செலுத்தினர் இறுதி நிகழ்ச்சிகள் திங்களன்று மாலை மேலமடையில் நடைபெற்றது.

வீட்டுமனை கேட்டு ஆர்ப்பாட்டம்

தேனி, அக்.3- தேனி மாவட்டம் கொங்குவார்பட்டி பேரூராட்சியில்  உள்ள வீடு இல்லாத ஏழை-எளிய மக்களுக்கு  வீட்டு மனைப்  பட்டா கேட்டு பெரியகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  திங்க ளன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனை பட்டா  கேட்டு  ஒன்பது மாதங்களுக்கு முன்பு மனு தேனி மாவட்ட  ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை  எடுக்கவில்லை. உரிய பதிலளிக்காத நிலையில் உரிய  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பெரியகுளம் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது  கட்சி யின்  தாலுகா செயலாளர் எம்.வி.முருகன், மாவட்டக் குழு  உறுப்பினர் பி.இளங்கோவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.ராமச்சந்திரன், எஸ்.வெண்மணி, மாவட்டக் குழு உறுப்பினர் பி.பிரேம்குமார், ஆர்.கே. ராமர், ஏ.மன்னர் மன்னன், கிளைச் செயலாளர் பஞ்ச வர்ணம் உட்பட  நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்  டனர். 

காவல் சார்பு ஆய்வாளரைக் கண்டித்து தற்கொலைக்கு முயன்ற தாய், மகள்

தேனி, அக்.3- தேனி  அருகே உள்ள பாலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வர் சரோஜா (67) இவருக்கு இரண்டு மகன்கள், மூன்று  மகள்கள் உள்ளனர். சொத்துப் பிரச்சனையில் இவரது மகன் கோபி மருமகள் மற்றும் உறவினர்கள் கடந்த மாதம் 13-ஆம் தேதி வீட்டில் இருந்த சரோஜாவை தாக்கி யதாகத் தெரிகிறது .இது குறித்து வீரபாண்டி காவல்நிலை யத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  இதற்கிடையே சரோஜாவின் மகள் வனிதா புஷ்பத்திற்கு சொத்துப் பிரச்சனை தொடர்பாக கொலை  மிரட்டல் விடுப்பதாகவும். இது குறித்து புகார் அளித்தும் வழக்குப் பதிவு செய்யப்பட்டும் வீரபாண்டி சார்பு ஆய்வா ளர் வரதராஜ் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி சரோஜா மற்றும் அவரது மகள் வனிதா புஷ்பம் இருவரும் தேனி ஆட்சியர் அலுவலகம் வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இருவரையும் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை தேனி மருத்து வக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இராமேஸ்வரத்திற்கு  கூடுதல் ரயில் நவாஸ்கனி எம்.பி., கோரிக்கை

இராமநாதபுரம், அக்.3- தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இராமேஸ்வ ரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே பொது  மேலாளரிடம் இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் நவாஸ்கனி கோரிக்கை:- தமது கோரிக்கை மனுவில், “சென்னை-இராமேஸ்வரம், கோயம்புத்தூர் (பழனி-திண்டுக்கல் வழி)  இராமேஸ்வரம், பெங்களூரு- (கோயம்புத்தூர்-நாமக்கல்- கரூர்-திண்டுக்கல் வழி) இராமேஸ்வரம், கன்னியாகுமரி-இராமேஸ்வரம், பாலக்காடு-இராமேஸ்வரம்-(ஈரோடு-திருப்பூர்-கோயம்புத்தூர்-பழனி- திண்டுக்கல் வழி)சேலம், ஹைதராபாத்-இராமேஸ்வரம். வழித்தடங்களில் ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை நகர் குப்பைகளைக் கொட்ட 6 ஏக்கர் நிலம் கேட்டு மனு

சிவகங்கை, அக்.3- சிவகங்கை நகரில் சேகரிக்கப்படும் பத்து லட்சம் டன்  குப்பைகளை கொட்டுவதற்கு சிவகங்கை நகரில் இருந்து  10 கிலோமீட்டர் தூரத்திற்குள் ஆறு ஏக்கர் இடம்  வேண்டும்  என ஆட்சியரிடம் நகர்மன்றத் தலைவர் துறை ஆனந்த், துணைத் தலைவர் கார் கண்ணன் உள்ளிட்ட 25 நகர்மன்ற உறுப்பினர்களும் துணைத்தலைவர் மற்றும்  நகர் மன்ற உறுப்பினர்கள் திங்களன்று மனு அளித்த னர். 

ஆற்று மணல் திருட்டு:  3 பேர் கைது

தூத்துக்குடி, அக்.3- தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு காவல்துறை யினர் ஞாயிறன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மணக்கரை ஓடைப்பாலம் அருகில் தாமிரபரணி ஆற்றுப் படுகையில் மணக்கரை பகுதியை சேர்ந்தவர்களான பாக்கியராஜ் (30), சின்னதுரை (45) மற்றும் மணி (20) ஆகிய 3 பேரும் 3 இருசக்கர வாகனங்கள் மூலம் மூட்டைக ளில் ஆற்று மணல் திருடியது தெரியவந்தது. இவர்கள் 3 பேரையும் கைது செய்த காவல்துறை யினர் அவர்களிடமிருந்து 9 மூட்டை ஆற்று மணல்  மற்றும் 3 இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து,  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொடியம்பாளையம் தீவு கிராமத்தை  சுற்றுலாத் தலமாக அறிவிக்க கோரிக்கை

மயிலாடுதுறை, அக்.3 -  காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. இதில் அந்தந்த ஊராட்சி களில் செய்து முடிக்கப்பட்ட மற்றும் செய்யப்பட வேண் டிய வளர்ச்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. சீர்காழி ஒன்றியம் ஆச்சாள்புரம் கிராம சபை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் லலிதா கலந்து கொண்டார். வானதிராஜபுரம் ஊராட்சியில் நடை பெற்ற கிராம சபை கூட்டத்தில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் கலந்து கொண்டார். மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள தீவு கிராமமான கொடியம்பாளையம் ஊராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ராமலிங்கம், சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம், சீர்காழி கோட்டாட்சியர் அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றிய பெருந்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்தனர். கொடியம்பாளையம் தீவு கிராமத்தை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். கொடியம்பாளையம் கிராம சாலையை நெடுஞ்சாலையுடன் இணைக்க  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

தோழர். கோடியேரி பாலகிருஷ்ணனுக்கு இராமநாதபுரம், விருதுநகரில் புகழஞ்சலி

மதுரை, அக்.3- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்  தோழர் கோடியேரி பால கிருஷ்ணன் சனிக்கிழமை உடல்நலக்குறைவால் கால மானார். அன்னாரது நினை வஞ்சலிக் கூட்டம் சிவ கங்கையில் மாவட்டச் செய லாளர் தண்டியப்பன் தலை மையில் நடைபெற்றது.  மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மணியம்மா, வீரபாண்டி, மோகன் முத்து ராமலிங்க பூபதி, கருப்புச் சாமி, ஆறுமுகம், சுரேஷ், இடைக்கமிட்டி செயலா ளர்கள் உலகநாதன், அய்  யம்பாண்டி, தென்னரசு,  ராஜூ மற்றும் சண்முகப் பிரியா, அழகர்சாமி, முரு கேசன், மெய்யப்பன், விஸ்வ நாதன், வடிவேலு,  சிபிஐ மாவட்டச் செயலாளர் கண் ணகி, மாவட்டத் துணைச் செயலாளர் கோபால், ஒன்றி யச் செயலாளர் சந்திரன், நக ரச் செயலாளர் மருது, விடு தலைச் சிறுத்தைகள் கட்சி யின்  மாவட்டத் துணைச் செய லாளர் சுப்பிரமணியன் ஆகி யோர் கோடியேரி பால கிருஷ்ணன் மறைவிற்கு புக ழஞ்சலி செலுத்தினர். விருதுநகரில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக் குழு அலுவல கத்தில் மறைந்த தோழர் கோடியேரி பாலகிருஷ்ண னுக்கு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். முத்துக்குமார், மாவட்டச்  செயலாளர் கே.அர்ஜூனன்,  மாவட்டச் செயற்குழு உறுப் பினர்கள் ஜி.வேலுச்சாமி, எல்.முருகன், எஸ்.லட்சுமி,  மாவட்டக் குழு உறுப்பினர் கள், ஆர்.முத்துவேலு,  பி. பாண்டி, எம்.கார்மேகம், எம். ஜெயபாரத், என்.உமா மகேஸ்வரி ஆகியோர் புக ழஞ்சலி செலுத்தினர். இராமநாதபுரத்தில் நடை பெற்ற அஞ்சலி நிகழ்வில் தாலுகா செயலாளர் பி. செல்வராஜ், மாவட்டச்  செயலாளர் வி.காசிநாத துரை, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.குரு வேல், நா.கலையரசன், மாவட்டக் குழு உறுப்பினர் கள் என்.வெங்கடேஷ், முத்  துப்பாண்டி. தாலூகா குழு  உறுப்பினர் எஸ்.பி.பூமி நாதன், கிளைச் செயலா ளர்கள் மணிக்கண்ணு, முத்  துக்குமார், லோகவர்மன் மற்றும் எல்.ஐ.சி ஊழியர்கள் கலந்துகொண்டனர்.

கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி 4 பேர் பலி இருவரைத் தேடும் பணி தீவிரம்

தஞ்சாவூர், அக்.3- தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆறு  பேர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கினர். இதில்  3 பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டது. மேலும் 3 பேர் உடலை தீயணைப்பு வீரர்கள் தேடி  வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. இங்கு தூத்துக்குடியில் இருந்து ஒரு பேருந்தில் 40 பேர் சுற்றுலாப் பயணி கள் ஞாயிறன்று  இரவு புறப்பட்டு திங்க ளன்று காலை பூண்டி வந்தனர். அவர்களில், சிலர் கொள்ளிடம் ஆற்றில், குளிப்ப தற்காக இறங்கியுள்ளனர். அவர்களில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகிலுள்ள சிலுவைப் பட்டி கிராமத்தைச் சேர்ந்த டி.சார்லஸ், டி.பிருதி விராஜ், தாவீதுராஜா, பிரவீன்,  டி.ஈசக்,  எஸ்.கெர்மல்  ஆகியோர் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனர். தகவலறிந்து வந்த திருக்காட்டுப்பள்ளி காவல்துறையின ரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையி னரும் இணைந்து தேடினர். இவர்களில் டி.ஈசக், எஸ்.கெர்மல் ஆகியோர் என்னவா யினர் எனத் தெரியவில்லை. மற்ற நான்கு  பேரும் சடலமாக மீட்கப்பட்டனர். அவர் களது உடல்கள் உடற்கூராய்விற்காக திரு வையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. மற்ற நான்கு பேரை தேடும் பணி தொடர்வாக திருக் காட்டுப்பள்ளி காவல் ஆய்வாளர் ஜெயக்  குமார் திங்களன்று மாலை தெரிவித்தார்.


 

;