தஞ்சாவூர், ஜன.22- தஞ்சாவூர் மகளிர் தையல் தொழிலாளர்கள் தொழில் கூட்டுறவு சங்கம் (லிமி) பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் மைசூர் மணி தலைமை வகித்துப் பேசினார். மேலாண்மை இயக்குநர் தோ.விஜயா வர வேற்றார். தஞ்சாவூர் மாவட்ட சமூக நல அலுவலர் இரா ஜேஸ்வரி, தொழிற் கூட்டுறவு மேற்பார்வையாளர் மனோ கரன், குந்தவை நாச்சியார் பெண்கள் தையல் சங்க மேலாண்மை இயக்குநர் முருகையன் ஆகியோர் பேசி னர். சங்கம் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெற்ற லாபத்தை சங்க துணை விதிகளின் அடிப்படையில் பிரித்து உறுப்பி னர்களுக்கு போனஸ் மற்றும் பங்கு ஈவுத் தொகை வழங்கப்பட்டது. சங்க நிர்வாகிகள் மற்றும் மேலாண்மை இயக்குநர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர். கணக்காளர் விஜயலட்சுமி தணிக்கை அறிக்கை வாசித்து நன்றி கூறினார்.