தஞ்சாவூர், செப்.21 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்று பட்ட தஞ்சை மாவட்டத்தின் மூத்த தலை வர்களில் ஒருவரும், விவசாயிகள் சங்கத்தின் முன்னோடியுமான ஒடுக்கப்பட்ட சமூகத்திற் காக போராடிய போராளி தியாகி என்.வி. என்று அழைக்கப்படும் தோழர் என்.வெங்க டாச்சலத்தின் 45 ஆவது நினைவு தினம் புதன் கிழமை கடைபிடிக்கப்பட்டது. சிபிஎம் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலை யம் கிளை சார்பில், பழைய பேருந்து நிலை யம் அருகில் புகழஞ்சலிக் கூட்டம் நடைபெற் றது. கூட்டத்திற்கு, சிபிஎம் மாநகரச் செயலா ளர் எம்.வடிவேலன் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ், கொடியேற்றி வைத்து, புக ழஞ்சலி உரையாற்றினார். தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மூத்த தலைவர் என்.சீனிவாசன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.சிவகுரு, கே.அருளரசன், ஆர்.கலைச் செல்வி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் என். குருசாமி, என்.சரவணன், இ.வசந்தி, எம்.மாலதி மற்றும் மாநகரக் குழு உறுப்பினர்கள், மா மன்ற உறுப்பினர் வைஜெயந்திமாலா முரு கேசன், இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் சந்துரு, தரைக்கடை சங்கம், சிஐடியு மற்றும் பல்வேறு அரங்கத்தினர் கலந்து கொண்டனர். பழைய பேருந்து நிலை யம் கிளைச் செயலாளர் மாதவன் நன்றி கூறி னார்.
கும்பகோணம்
இதை முன்னிட்டு கும்பகோணம் சிஐடியு அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜீவபாரதி, மூத்த உறுப்பினர் ஆர்.ராஜ கோபாலன், மாநகர செயலாளர் செந்தில் குமார், ஜி. கண்ணன் மற்றும் அம்பேத்கர் வேலைவாய்ப்பு பயிற்சி மைய மாண வர்கள் அஞ்சலி செலுத்தினர்.
முல்லைக்குடி
பூதலூர் வடக்கு ஒன்றியம் முல்லைக்குடி யில் சிபிஎம் கிளை சார்பில் மக்கள் தலை வர் தியாகி என்.வெங்கடாச்சலத்தின் 45 ஆவது நினைவு தினம், சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் வழக்குரைஞர் எம்.கே.சேகர் தலைமையில் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் கே.காந்தி கொடி யேற்றி, தியாகி என்.வி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதில் சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர் பி. முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.