districts

வேலையில்லாத இளைஞர்களுக்கு ஜவுளித் துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தஞ்சாவூர், ஜூன் 7-  வேலையில்லாத இளை ஞர்களுக்கு திறன் மேம் பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் வெளி யிட்டுள்ள செய்திக் குறிப் பில் கூறியுள்ளதாவது:  இந்திய பொருளாதாரத் தில் ஜவுளித் தொழில் ஒரு  தனித்துவமான இடத்தை  பிடித்துள்ளது. விவசாயத் துக்கு அடுத்தபடியாக கிரா மப்புற மக்களுக்கு பெரிய அளவிலான வேலை வாய்ப்பு வழங்குவதில் ஜவு ளித்துறைக்கு மிகப்பெரிய பங்கு உள்ளது.

  நாட்டின் மொத்த ஜவுளி  உற்பத்தியில் தமிழ கத்தின் பங்கு மிக முக்கிய மானதாகும். தமிழகத்தின் துணிநூல் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உரு வாக்குவதற்காக, தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (இரு பாலர்கள்) தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக் கழகம் (SITRA) மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும்  தொழில்நுட்ப ஜவுளி பிரிவு களில் பயிற்சி அளிக்க உள்ளது.

 மேற்படி பயிற்சியினை பெற விரும்புபவர்கள் https: //tntextiles.tn.gov.in./ jobs/ என்ற வலைதளத்தில் பதிவு செய்து பயன்பெற லாம்.  இப்பயிற்சி தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மண்டல துணை இயக்குநர், மண்டல துணை இயக்குநர் அலுவலகம், துணிநூல் துறை, 30/3, நவலடியான் வளாகம் முதல் தளம், தான் தோன்றிமலை, கரூர்-639  005, மின்னஞ்சல் : rdd textileskarur@gmail.com,  தொலைபேசி எண் : 04324- 299 544, 98945 60869, 94446 56445-ஐ அணுகலாம் என தெரிவித்துள்ளார்.

;