districts

img

பாரதியார் பிறந்தநாள் விழா

கும்பகோணம், டிச.11- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் சார்பில் மகாகவி பாரதியாரின் 140-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, தஞ்சை மாவட்டம் அம்மாச்சத்திரம், திருபுவனம், கன்னிதோப்பு, நாச்சியார்கோவில் ஆகிய பகுதியில் அவரது சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. அம்மா சத்திரத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்டச்  செயற்குழு உறுப்பினர் நீலமேகம், மாவட்ட  துணைத் தலைவர் சொக்கலிங்கம் நாச்சியார்கோவில் செயற்குழு உறுப்பி னர்கள் லெனின்பாரதி உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் சிறுவளூர் ஊராட்சி  ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். சமூக அலு வலர் கலைமணிதேவி பாரதியார் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினார். கோயம் புத்தூர் அரசு கலைக் கல்லூரி பேராசிரியை மாலதி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர்  அகிலா, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  சின்னதுரை மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் கலந்து கொண்டனர்.