சேலம், நவ.25- பெண்கள் மற்றும் பெண் குழந்தை கள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்தக் கோரி அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தினர் புதனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பெண் கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் பெண்களுக்கு பாது காப்பு வழங்கிட வேண்டும். பெண் களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கி, அதனை சட்டமாக்க வேண் டும் என வலியுறுத்தி உலக வன்முறை எதிர்ப்பு தினமான புதனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட் டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங் கத்தின் மாவட்ட தலைவர் டி. பர மேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஐ.ஞானசௌந்தரி, மாவட்ட பொருளாளர் என். ஜெயலட்சுமி, மாவட்ட துணை செயலாளர் ஆர்.வைரமணி, மாவட்ட துணைத்தலைவர் கே.ராஜாத்தி, எஸ்.எம்.தேவி, வடக்கு மாநகர செயலாளர் காவேரி, மேற்கு மாநகர செயலாளர் ஆர்.ஜெயமாலா, ஒன்றியத் தலைவர் கோகிலா, ரேணு காதேவி உள்ளிட்ட பலர் கலந்து கொணடனர்.