districts

சிறுத்தையை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைப்பு!

சேலம், ஜூன் 6- ஓமலூர் அருகே உள்ள காரு வள்ளி பகுதியில் நடமாடும் சிறுத்தை யைப் பிடிப்பதற்காக மூன்று இடங்க ளில் கூண்டுகள் வைக்கப்பட்டு, கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காருவள்ளியில் சிறுத்தை நட மாட்டம் கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இதே கிரா மத்திற்கு வந்த சிறுத்தை ஆட்டை வேட்டையாடியது. அதன்பிறகு பூசாரிப் பட்டி கிராமத்தில் உள்ள வனத்திற்குச் சென்றது. பிறகு மேட்டூர் வனச்சரகத் திற்கு சென்ற சிறுத்தை தற்போது மீண் டும் காடையாம்பட்டி பகுதிக்கே வந்துள் ளது. இங்குள்ள கரட்டில் உலாவும் சிறுத்தை, நாய், ஆட்டையும், அண்மை யில் ஒரு பசுமாட்டையும் வேட்டையாடி யது. இந்நிலையில், டேனிஷ்பேட்டை வனத்துறை அலுவலர் தங்கராஜ் தலை மையிலான வனத்துறையினர்,

அக் கிராமத்தில் முகாமிட்டு, சிறுத்தை நட மாட்டத்தை கண்காணித்து வருகின்ற னர். மாடு இறந்து கிடந்த இடத்தைச் சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர். இந்நிலை யில், ஏற்கனவே அடித்துக் கொல்லப் பட்ட மாட்டை மீண்டும் வந்த சிறுத்தை, சாப்பிட்டுச் சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இதனைத்தொ டர்ந்து, சேலம் மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிக்கு வந்து ஆய்வு செய்தார்

. அப்போது அங்கு வைக்கப்பட் டுள்ள கண்காணிப்பு கேமராவில் மிகப் பெரிய அளவிலான சிறுத்தை வந்து  செல்வது தெரியவந்துள்ளது. இதைய டுத்து சிறுத்தை நடமாட்டம் உள்ள  மூன்று இடங்களில் சிறுத்தையைப் பிடிப்பதற்கான கூண்டுகள் வைக்கப்பட் டிருந்தது. மேலும் சிறுத்தை பிடிப்பதற் கான நடவடிக்கைகள் குறித்து வன அலு வலர்களுக்கு ஆலோசனை வழங்கி னார். தொடர்ந்து அப்பகுதியில் வனத் துறை அதிகாரிகள் முகாமிட்டு கண்கா ணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்ற னர். சத்தியமங்கலம் வனப்பகுதியைச் சேர்ந்த வனவிலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வு செய்யும் மூன்று பேர் அடங்கியக் குழுவை வரவழைத்து ஆய்வு செய்து, அவர்களின் ஆலோ சனையின்படி சிறுத்தை நடமாட்டம், சிறுத்தை வரும் வழியைக் கண்டறிந்து மூன்று கூண்டுகளை வைத்துள்ளனர். மேலும், 20க்கும் மேற்பட்ட வனப்பாது காவலர்கள் இரவு, பகலாகக் கண்கா ணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

;