districts

img

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார்

தொலைதூரக் கல்வித் திட்டத்தில் போலியாக ஆசிரியர்களைக் கணக்குக் காட்டி மாநிலக் குழுவை ஏமாற்றியதாகச் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொலைதூரக் கல்வித் திட்டத்தில் போலியான ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பல்கலைக்கழகத்தின் பணியாற்றும் ஆசிரியர்களின் பெயர்களையும், தகுதியே இல்லாதவர்கள் பலரின் பெயரையும் தொலைதூரக் கல்விக்கான ஆசிரியர்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.