districts

8 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

சென்னை, ஜூலை 4-

     சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த பயணிகள் உடமைகளை ரயில்வே காவல்துறையினர் சோதனை செய்தபோது உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்ற  வாலிபர் 8 கிலோ கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது. உடனே அவர் கைது செய்யப்பட்டார்.

    கடந்த சில மாதங்களாக சென்னையில் கஞ்சா அதிக அளவில் பிடிப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.