திருவண்ணாமலை,ஆக.10- அரசுக்கும் மக்களு க்கும் இடையே உள்ள இடை வெளி நிரப்பும் வகையில் சேவை, பங்களிப்புடன் பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டும் என்று சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் ஒன்றிய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ம.அண்ணாதுரை தெரி வித்துள்ளார். இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் சார்பில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் நிதி நிலை அறிக்கை பற்றிய ஊடகவியலாளருக்கான ஒரு நாள் பயிலரங்கம் திரு வண்ணாமலையில் நடை பெற்றது. இந்த பயிலரங்கம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகத்தின் கூடுதல் தலைமை இயக்குநர் ம.அண்ணாதுரை துவக்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “அரசின் திட்டங்கள் பல மக்களுக்கு தெரியாமல் உள்ளது. அரசின் திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும், அரசுக்கும் மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளி நிரப்பும் வகையில் சேவை, பங்களிப்புடன் பத்திரி கையாளர்கள் செயல்பட வேண்டும்” என்றார். சென்னை பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குநர் அருண்குமார் எளிமை யான முறையில் சமூக வலை தளங்களில் உடனுக்குடன் செய்திகள் வந்தாலும் மக்களின் நம்பகத் தன்மையாக பத்திரிகைகள் உள்ளது என்றார். மத்திய ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை இயக்குநர் ராஜீவ் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை பற்றி விளக்கி பேசினார், பயிலரங்கில் பங்கேற்ற பத்திரிகையாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. முன்னதாக சென்னை பத்திரிகை தகவல் அலு வலகத்தின் துணை இயக்கு நர் விஜய லட்சுமி வர வேற்றார். முடிவில் மக்கள் தொடர்பகத்தின் தொழில் நுட்ப உதவியாளர் முரளி நன்றி கூறினார்.