செங்குன்றம்,மே 26-
சோழவரம் அருகே விஜயநல்லூர் பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் 40-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர். இதற்காக அவர்களுக்கு அங்கு ஓலை கொட்டகை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஓலை கொட்டகையில் வெள்ளி யன்று (மே 26) காலை திடீரென தீப்பற்றியது. இந்த விபத்தின் போது கொட்டகையில் தொழி லாளர்கள் யாரும் இல்லாத தால் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். மேலும் இந்த தீ அருகே இருந்த பழைய பிளாஸ்டிக் மற்றும் மரக்கட்டைகள் குடோ னுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.தகவல் அறிந்ததும் செங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் குடோன்களில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசமானது. தீ விபத்துக்கான காரணம் குறித்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.