தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மகளிர் தின விழா திருவல்லிக்கேணியில் மாவட்டத் தலைவர் ப.சுந்தரம்மாள் தலைமையில் நடைபெற்றது. இதில் எத்திராஜ் மகளிர் கல்லூரி இணை பேராசிரியர் அரங்க மல்லிகா, மாநில மகளிர் துணைக்குழு உறுப்பினர் உ.சுமதி, இணைச் செயலாளர் ஜெ.சரஸ்வதி ஆகியோர் பேசினர். முன்னதாக மாவட்ட அமைப்பாளர் அ.சுமதி வரவேற்றார். த.வாசுகி நன்றி கூறினார்.