districts

img

பட்டியல் சாதியின் பெயரில் கிராமத்தின் பெயர் மாற்றிட வாலிபர் சங்கம் கோரிக்கை

கிருஷ்ணகிரி,செப்.8- கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வட்டத்தில் திருப்பத்தூர் சாலை மல்லப்பாடி யில் இருந்து மத்தூர் செல்லும் சாலை பிரி கிறது. இச்சாலையில் பெரியார் சமத்துவ புரம் சாலை சந்திப்பில் வேங்கடசமுத்திரம் கிராமம் உள்ளது. இங்குள்ள இரு கடைகள் தவிர பத்துக்கும மேற்பட்ட கடை களில் பெயர் பலகைகளில் ‘சக்கில் நத்தம்’ எனவும் எழுதப்பட்டுள்ளது இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலி பர் சங்க தலைவர்கள் விசாரித்த போது சக்கிலி நத்தம் என்பது பேச்சு வழக்கில் மருவி சக்கில் நத்தம் என கால காலமாக அழைக்கப்பட்டு வருகிறது என அங்குள்ள சிலர் சங்கடத்துடன் கூறுகின்றனர். மேலும் அங்குள்ள இ-சேவை மையத்தில் இரண்டு பெயர்களும் எழுதப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி சிலர் மட்டுமே வெங்கட சமுத்திரம் என அழைப்பதாகவும் கூறினர். எனவே, மாவட்ட நிர்வாகமும் பர்கூர் வட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு தலித் மக்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ள கிராமத்தின் பெயரை நிரந்தரமாக மாற்ற வேண்டும்,பெயர் பலகைகளில் கிராமத்தின் பெயர் மாற்றப்பட வேண்டும் என பர்கூர் வட்ட வாலிபர் சங்கம் சார்பில்  செயலாளர் திருப்பதி கோரிக்கை விடுத்துள்ளார்.