தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.இதில் மாநில துணைச்செயலாளர் எஸ்.கே.மாரியப்பன், மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் கி.ராதை, பொருளாளர் நடராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் செல்வகுமாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.