districts

img

வள்ளலார் சர்வதேச மையம்: மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்

கடலூர், மே.17- வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் விவ காரத்தில் மக்களின் கருத்து களையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், இந்து  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகி யோரிடம் சிபிஎம் மாவட்டக் குழு சார்பில்  அளிக்கப்பட் டுள்ள மனு  வருமாறு:  மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்ட செயலா ளர் கோ.மாதவன், மாநில  குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு உள்ளிட் டோர் அளித்துள்ள மனு வில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையை திரித்து அவரை ஒரு சமா தானவாதி என்று கட்ட மைக்க முயற்சி செய்யும் நேரத்தில் அவரது உண்மை யான சமூக பார்வையும், சைவ சித்தாந்த நெறிகளை யும், அதன் கொள்கை களையும் உலகிற்கு அறிவிக் ்கும் வகையில் அவருக்கு என்று சர்வதேச மையம் வடலூரில் அமைக்க தமிழக அரசு எடுத்துள்ள முயற் சியை மார்க்சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. அதே நேரத்தில் அரசின்  அறிவிப்பில் இரு வேறு கருத்துக்கள் நிலவு நிலவு கிறது. பெருவெளியை ஆக்கிரமித்து இந்த சர்வ தேச மையத்தை அமைக்க கூடாது என்றும், பெருவெளி யில் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ள பகுதிகளை மீட்டு அந்த இடத்தில் அமைக்க வேண்டும் என்றும், 105  ஏக்கர் நிலத்தை வள்ளலா ருக்கு தானமாக கொடுத்த பார்வதிபுரம் மக்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.  இதற்கு மாவட்ட நிர்வாக மும் தமிழக அரசும் விரைந்து  நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அறநிலையத் துறை சார்பாக வெளியிடப் பட்டுள்ள திரு அருட்பா உரைநடை பகுதியில் பார்வதிபுரம் கிராம மக்கள் தானமாக அளித்த  81 கானி நிலம் மற்றும் அளித் தவர்களின் பெயர்கள் உள்ளிட்டவை நீக்கப்பட் டுள்ளது. இந்த விவரங் களை மீண்டும் சேர்க்க வேண்டும். சர்வதேச மையத்தின் கல்வெட்டிலும் அரசு வெளியிட வேண்டும்.  சர்வதேச மையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும், கட்டுமான பணிகளுக்காக பள்ளம் தோண்டிய போது அங்கே கட்டிடம் இருந்ததற்கான அடையாளம் தெரிந்தவுடன் தொல்லியல் துறைக்கு ஆய்வு செய்ய அரசு உத்தர விட்டது. அதனை முழுமை யாக முடிக்க வேண்டும். நெய்வேலி சாலையில்  இருந்து 150 ஆண்டுக ளுக்கு முன்னர் வள்ளலார் உருவாக்கிய பிரதான சபையை பார்த்து செல்லும் மக்கள் அதை மறைக்கும்படியான எந்த  கட்டுமானமும் மேற்கொள் ளக்கூடாது.  வள்ளலாரின் புகழ்  உலகம் வியக்க அமைக்கப் படும் இந்த சர்வதேச மையத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது அதற்கு ஆதாரமாக நிலங்களை கொடுத்த பார்வதிபுரம் மக்களுக்கும் கட்டுமான பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். இந்த மாற்று ஆலோசனைகளையும் அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று  அந்த மனு வில்  மார்க்சிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது.

;