மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஏ.கே.ஷாஜகான் படத்தை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். ராயபுரத்தில் நடந்த இந்த படத்திறப்பு நிகழ்ச்சிக்கு பகுதிச் செயலாளர் எஸ்.பவானி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், ஆர்.லோகநாதன், எம்.எல்.ரவி (திமுக), ஆ.கிருஷ்ணமூர்த்தி (காங்கிரஸ்), எம்.ஏ.எஸ்.அக்பர் (அதிமுக), எஸ்.முஜீப் (ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம்), ஏ.முகமது ரபிக் (மமக), ஜி.ராபர்ட், கே.செல்வானந்தன், கே.பலராமன் (வியாபாரிகள் சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.