districts

img

தத்துவமேதை மார்க்ஸ் தோழர் கே.ஆர்.சுந்தரம் படத்திற்கு அஞ்சலி

வேலூர்,மே.5- விடுதலைப் போராட்ட வீரரும், சிபிஎம் வேலூர் மாவட்ட மூத்த முன்னோடியும், முன்னாள் சட்ட மன்ற உறுப்பி னருமான தோழர் கே.ஆர்.சுந்தரத்தின் 19 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காட்பாடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் காட்பாடி வட்டக்குழு செயலாளர் ஆர்.சுடரொளியன் தலை மையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மூத்த தோழர் என்.பிச்சுமணி, வட்டக்குழு உறுப்பினர்கள் எம்.கணேஷ், ஏ.பழனியப்பன், கண்ணன், வாலிபர் சங்க தாலுகா தலை வர் லோ.நவீன், ஜெகன் (சிஐடியு), கோவிந்தம்மாள் ஆகியோர் கலந்து கொண்ட னர். சிஐடியு வேலூர் மாவட்டக்குழு சார்பில் பழைய பேருந்து நிலை யம் சிம்லா ஆட்டோ நிறுத்தத்தில் மாவட்ட தலை வர் டி.முரளி தலைமையில் கே.ஆர்.சுந்தரம் மற்றும் மார்க்சிய பேராசான் கார்ல்மார்க்ஸ்  206வது பிறந்த நாளையொட்டியும் இருவரது படத்திற்கும் மாலை அணிவித்து மரி யாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.பரசுராமன், பொருளாளர் எம்.கோவிந்த ராஜ், நிர்வாகிகள் வி. நாகேந்திரன், ஏ.பழனி யப்பன், கேசவன் (சாலைப் போக்குவரத்து), சி.எஸ்.மகாலிங்கம்(விச) மற்றும் ஆட்டோ சங்கத்தினர் கலந்து கொண்டனர். குடியாத்தம் சிபிஎம் நகரக்குழு சார்பில் கார்ல்மார்க்ஸ், கே.ஆர்.சுந்தரம் படம் வைத்து புவ னேஸ்வரிபேட்டை கிளை யில் நகர செயலாளர் பி.காத்தவராயன் தலைமை யில் மரியாதை செலுத்தி னர்.