மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் மறைந்த முன்னாள் மேற்கு வங்க முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன துணைத் தலைவர் ஏ.பி.அன்பழகன், மாநில பொருளாளர் வி.சசிகுமார், நிர்வாகிகள் நந்தகோபால், சுரேஷ்குமார், ஜான், சந்துரு, பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.