districts

மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்க சென்னையில் ஜூலை 3ஆவது வாரம் சிறப்பு முகாம்

சென்னை, ஜூலை 8 -

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கு ஜூலை 3வது வாரம் முதல் சென்னை யில் சிறப்பு முகாம்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மகளிருக்கு மாதம் ரூ1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 8) ரிப்பன் மாளிகை வளாகத்தில்  சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதா கிருஷ்ணன் தலைமையில் நடை பெற்றது.

    இதில், நுகர்பொருள் வாணிப கழகம், சென்னை மாவட்ட காவல்துறை, சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரி யம் உள்ளிட்ட துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், ஜூலை 3வது வாரம் முதல் சிறப்பு முகாம்களை நடத்து வதற்கு ஆணையர் அறிவுரைகளை வழங்கினார்.

    பயனாளிகளின் விவரங்களை தேர்வு செய்ய சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகள் கண்டறியப்பட்டுள்ளன.

   குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகளின் அடிப்படையில் முகாம் நடத்துவ தற்கான இடங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன. முகாம்கள் நடைபெறும் இடங்களில் அடிப்படைவசதிகள் ஏற்படுத்தப்படும். தேவையான இடங்களில் பந்தல்களும், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், கர்ப்பிணிகள் போன்றோருக்கு தேவை யான வசதிகளும் செய்து தரப்படவேண்டும்.

    இந்தப் பணிகளை மேற்பார்வையிட மண்டல அலுவலர்கள் தலைமையில், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள், உதவி வரு வாய் அலுவலர்கள், உதவி சுகா தார அலுவலர்கள், உதவி கணக்கு அலு வலர்கள், உதவி மின் பொறியாளர்கள் நிலையில் ஒரு அதிகாரியும், அந்தப் பகுதியை சார்ந்த ஒரு உதவி அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

   கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக டிஎன்இசிஏ  மூல மாக மாநகராட்சி உதவி வரு வாய் அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வ லர்கள் மூலமாக பயோமெட்ரிக் மூலம் பயனாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்படும்.

;